கிழக்கில் முதற்தடவையாக ஸ்பிரிங்வெல் எனும் நவீன நீர்ப்பம்பி

DSC09498பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக நவீன  நீர் பம்பி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் பொறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் நிறுவப்படவுள்ள ஸ்பிரிங் வெல் எனும் நவீன நீர்ப்பம்பி தற்போது முதற்கட்டமாக காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் 7200 சதுர அடி பரப்பில் பொறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் ஸ்பிரிங் வெல் எனும் நீர்ப்பம்பி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் பூராக பொறுத்தப்படவுள்ளது.

குறித்த நீர்ப்பம்பி யாரின் உதவியும் இல்லாமல் தானகவே மைதானம் முழுவதும் நீரை சரியான முறையில் பாய்ச்சும் என்பதுடன் செயற்கை முறையில் புல் வளர்ப்பதற்காகவே இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment