‘கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம்: என் மீது வீண்பழி’ – பைஸர் முஸ்தபா

faizarகொழும்பு: கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விட யத்தில் தான் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சித்ததே தவிர பிரச்சினையை உருவாக்க எந்த வகையிலும் முயற் சிக்கவில்லை. புதிய பள்ளிவாசலில் தொடர்ந்தும் சமயக் கடமைகளை மேற்கொள்வதற்கு நான் புத்தசாசன அமைச்சின் செயலாளரிடமிருந்து அனுமதி பெற்றதனாலேயே பள்ளிவாசல் தாக்கப்பட்டது என்பது தவறு அவ்வாறு அனுமதி பெறப்பட்ட தனாலேயே எமக்கு வெற்றி கிடைத்தது.

இல்லையேல் பழைய பள்ளிவாசலையும் நாம் இழந்திருப்போம் என்று பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கிறேண்ட்பாஸ் பள்ளிவாசல் 1994 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இதனை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியேற்றப்பட்டதன் காரணமாக புதியதொரு இடத்தை முஸ்லிம்கள் பள்ளிவாசலாக மாற்றினர். அதன் பின் இப்பள்ளிவாசல் தாக்குதலுக்கு உள்ளானது.

இது விடயம் அறிந்து நான் அங்கு சென்று கடந்த 10ஆம் திகதி இரவு 7.30 முதல் இரவு 2 மணி வரை களத்தில் நின்று அனைத்து மக்களினதும் ஐக்கியத்திற்காக பாடுபட்டேன். என்னை பொறுத்தவரை சிங்கள முஸ்லிம் ஐக்கிய சக வாழ்வே முக்கியம். இதற்கு பின் புத்தசாசன அமைச்சில் நடந்த கலந்துரையாடலின் போது தொடர்ந்து அனைவரும் பழைய பள்ளிவாசலில் தொழுவது என முடிவெடுக்கப்பட்டது.

தனது மத ஸ்தலத்துக்கு ஒருவர் செல்வது என்பது சிறந்த செயல். எனினும் நடைபெற்ற சம்பவத்தைப் பற்றி சரி பிழை பார்ப்பதில் அர்த்தமில்லை. மாறாக அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே பிரதான விடயமாகும்.

இந்த பள்ளிவாசல் விடயத்தில் பிரச்சினையை நீக்க நல்ல தீர்வுக்காக முயற்சி எடுத்த அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு எனது நன்றிகள். அவரைப் போன்ற தலைவர்கள் இந்த நாட்டுக்கு தேவை என்றும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

எந்த மதஸ்தலமாயினும் தனிநபர் சொத்தாயினும் அதனை தாக்க யாருக்கும் உரிமை இல்லை. தனிநபரின் சொத்தை தாக்குவது என்பதை விட சமயஸ்தலத்தை தாக்குவது என்பது பாரதூரமான விடயமாகும். இதற்கு கட்டாயமாக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு சில அரசியல்வாதிகள் நான் இவ்வாறு அமைச்சின் செயலாளரிடமிருந்து அனுமதியைப் பெற்று சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பி வைத்ததனாலேயே பிரச்சினை உருவாகி பள்ளிவாசல் தாக்குதல்களுக்கு உள்ளானது என என் மீது பழி சுமத்துகிறார்கள். நான் எனது சொந்த நலனுக்காக அரசியல் செய்யவில்லை. சமுதாய நலனுக்காகவே அரசியலில் இறங்கினேன்.

– தினகரன்

Published by

Leave a comment