எமது மாவட்டத்தில் இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் முதன்மை பெருகிறார் அரச அதிபர் சார்ள்ஸ் – இல்மி அஹமட் லெவ்வை

ILMI JPபழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: கடந்த 22.08.2013 அன்று பெண்களுக்கான முகாமைத்துவ நிறுவனத்தினால் சிறந்ந பெண்மணிக்கான விருது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிர் திருமதி பி. எஸ். எம் சார்ள்ஸூக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நாம் சமூகத்தில் நலிவுற்ற தமிழ் முஸ்லிம் மக்களுக்காக உழைத்து வருகின்ற நிறுவனமென்ற வகையில் எங்களது இதயம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முதல்வரும் சமூக சேவையாளருமான இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொடூர யுத்தத்தால் மூன்று தசாப்தங்களாக பாதிப்புக்குள்ளாகி தமிழ் முஸ்லிம் இனங்கள் கறுப்புக் கண்ணாடிக்களுக்குள் பார்த்துக்கொண்ட காலம் நிலவியது. இன்று அதிமேதகு ஜனாதிபதி அவர்களது வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் அபிவிருத்தித் துளிவிட்டு வளர்ந்து வருகின்ற இச் சூழ்நிலையில் எமது அரச அதிபர் அவர்கள் மாவட்டத்தின் இன நல்லுறவைகட்டி வளர்ப்பதற்காகவும் நடைபெறும் அபிவிருத்தி பணிகள் செவ்வெனே நடைபெற வேண்டும் என்பதற்காகவும் நேர காலம் பாராது பிராந்தியம் முழுவதும் சென்று உழைத்து வருகின்றார்;.

மாத்திரமல்லாது மட்டக்களப்பு பிராந்தியத்தில் எந்த ஒருமூலையில் நடைபெறுகின்ற தமிழ் முஸ்லிம்களினது பொது நிகழ்வுகளாக இருந்தாலும் ஓய்வு நேரங்களிலும் தன்னலம் பாராது கலந்து கொள்வது இனநல்லுறவுக்கான விதைப்புகளாகும்.

விஷேடமாக அண்மையில் மோட்டார் சைக்கிள்களில் பெண்கள் இருபக்கமும் கால்வைத்து பின் ஆசனத்தில் அமர்ந்து பயணிக்கும் போது எற்பட்ட பெரும் அசௌகரிகத்தை உரிய பொலிஸ் தலைமைகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சிறந்த தீர்வுக்கு முன்னோடியாக செயல்பட்டார்.

எனவே இவ்வாறான ஒருவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுவது என்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது என்றுஇல்மி அஹமட் லெவ்வை மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment