கொழும்பு: முப்படையினர் சிவில் பாதுகாப்புப் பணிகளிலிருந்து அகற்றிக்கொள்ளப்படுவர் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முப்படையினரையும் சிவில் பாதுகாப்புப் பணிகளிலிருந்து கிரமமான முறையில் அகற்றிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக படையினரை சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடுத்த நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார். எனினும், யுத்த நிறைவின் பின்னர் படிப்படியாக இராணுவத்தினரும் ஏனைய படையினரும் சிவில் பணிகளிலிருந்து அகற்றிக்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகியன காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Leave a comment