கர்பலா: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு சமூக பணிகளை செய்துவரும் கர்பலா நகர் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு ஏற்பாடு செய்த கலை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நேற்று 23-08-2013 வெள்ளிக்கிழமை மாலை மட்-கர்பலா நகர் அல்மனார் வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.எஷ்.ஏ.றஸீத் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது நிகழ்வின் கௌரவ அதிதிகளினால் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் பகுதி நேர வகுப்பு மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் பகுதி நேர வகுப்பு மாணவர்களின் ஆற்றல்களையும் முஸ்லிம்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக கிறாஆத் பாடல்,கதை,கவிதை ,பேச்சு என்பன இடம்பெற்றதோடு ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் உறுப்பினர்களின் நாடகமும் இங்கு அரங்கேற்றப்பற்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் அதிதிகள் உரையை மட்-கர்பலா நகர் அல்மனார் வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம்.பரீட், கர்பலா ஜாமிஉல் மனார் ஜூம்மா பள்ளிவாயல் செயலாளர் ஏ.எம்.ஏ.சிறாஜ் ,காத்தான்குடி அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்வில் கர்பலா நகர் பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி எஸ்.செல்வராசா,ஒள்ளிக்குளம் பாக்கியதுஸ் ஸாலிஹாத் ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் எம்.ஏ.அபுல் ஹஸன், மட்-கர்பலா நகர் அல்மனார் வித்தியாலய ஆசிரியர் எம்.எம்.றஹ்மதுல்லாஹ் ,ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் செயலாளர் முஹம்மட் மபாஸ் உட்பட ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் உறுப்பினர்கள், உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் பள்ளிவாயல் நிர்வாகிகள் மட்-கர்பலா நகர் அல்மனார் வித்தியாலய ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
![DSC08737[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc087371.jpg?w=150&h=112)
![DSC08716[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc087161.jpg?w=780&h=585)
![DSC08720[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc087201.jpg?w=780&h=585)
![DSC08737[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc087371.jpg?w=780&h=585)
Leave a comment