உமர் இப்னு கத்தாப் பள்ளிவாயல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் பூநொச்சிமுனை கடற்கரையில் விஷேட பயான் நிகழ்வு

DSC08783[1]– பழுலுல்லாஹ் பர்ஹான்

பூநொச்சிமுனை: மட்டக்களப்பு பூநொச்சிமுனை கடற்கரையில் அமைந்துள்ள ஓரே ஒரு பள்ளிவாயலான உமர் இப்னு கத்தாப் பள்ளிவாயல் நிருவாகம் ஏற்பாடு செய்த விஷேட பயான் நிகழ்வு 23-08-2013 வெள்ளிக்கிழமை நேற்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 10.15 மணிவரை பூநொச்சிமுனை கடற்கரை உமர் இப்னு கத்தாப் பள்ளிவாயல் முன்றலில் இடம்பெற்றது.

இதில் ‘ஓற்றுமையான வாழ்வே ஓளிமயமான எதிர்காலம் ‘ எனும் தலைப்பில் காத்தான்குடி அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) யும் ஆடம்பெற வாழ்வும் ,அதிகரிக்கும் கடன் சுமையும் எனும் தலைப்பில் அக்கரைப்பற்று தத்பீகுஷ் ஷரிஆ ஆண்கள் அறபுக்கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளரும், பிரபல இஸ்லாமிய சொற்பொழிவாளருமான அஷ்ஷேய்க் எஸ்.எம். அப்துல் ஹமீட் (ஷரயி) யும் விஷேட மாரக்க சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்.

இவ் விஷேட மார்க்க சொற்பொழிவில் ஆண்கள்,பெண்கள், இளைஞர்கள்,பொது மக்கள் என பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

DSC08750[1]

DSC08771[1]

DSC08783[1]

Published by

Leave a comment