முகமட் சஜி
காத்தான்குடி: இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் கல்வியுடன் கூடிய தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையிலான புதிய பாடத்திட்டங்களை உள்வாங்கி அதன் மூலமான கற்கைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இதற்கமைய முதற்கட்டமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை இத்திட்டத்தினுல் உள்வாங்குவது தொடர்பா ஆராயும் கூட்டம் டாக்டர் எம். இஸ்மாயில் தலைமையில் நேற்று இடம் பெற்றது. பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற கலந்துறையாடலில் சவுதி அரேபிய கல்வி, கலாசார அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் காலித் தாவுத் தலைமையிலான விரிவுரையாளர்கள் குழுவினர் பங்கேற்றனர். முதற்கட்டமாக சவுதி அப்கா கிங் அப்துல்அஸீஸ் பல்கலைக்கழகத்தினுல் இத்திட்டத்திii அமுல்படுத்தவும் தீர்மானம் எடுக்கபட்டது.
Leave a comment