ஹாஸிம் அம்லா வழியில் மற்றுமொரு இங்கிலாந்து வீரர்

images[1]– MJ

லண்டன்: முயீன் முனீர் அலி. தற்பொழுது இங்கிலாந்து உள்ளக பிரபல அணிகளுக்கிடையில் பேசப்பட்டுவரும் ஒரு வீரர். தற்பொழுது வூஸ்டர்செயார் கவுண்டி அணியில் விளையாடி கலக்கி வருகிறார் முயீன் அலி. ஜூன் 18, 1987இல் இங்கிலாந்து, பேர்மிங்கம் நகரில் பிறந்த இவர், தற்பொழுது இங்கிலாந்து தேசிய அணிக்குள் எதிர்பார்க்கப்படும் வீரர்களுள் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.

இடது கை துடுப்பாட்டம் மற்றும் வலது கை ‘ஓப்’ சுழல் பந்து வீச்சாளர் என்ற சகலதுறை வீரராக தனது கவுண்டி அணியில் சாதனைக்கு மேல் சாதனைகளை பதிவு செய்து வருகின்றார். முன்னாள் இங்கிலாந்தின் சிறந்த துடுப்பாட்ட வீரரான கிரகம் ஹிக், இதே கவுண்டி அணியில் நிகழ்த்திய சாதனைகளை முயீன் அலி தற்பொழுது நிரப்பி வருகின்றார். பத்தொன்பது வயதுக்கிடைப்பட்ட இங்கிலாந்து அணியில் விளையாடியதன் பின்னர் கவுண்டி அணியில் தனக்கொரு இடத்தையும் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

article-1280489-09B1501C000005DC-241_306x423[1]

பாகிஸ்தான் பூர்வீகத்தைக் கொண்ட முயீன் அலி, சிறந்த மார்க்கப்பற்றுள் இளைஞர். விளையாட்டின்போது தொழுகைகளை விடமாட்டார். ஓய்வு நேரங்களில் புனித அல்குர்ஆனை ஓதி, ஆராய்ந்து வருகின்றார். இதனால் முயீன் அலியை இங்கிலாந்து மக்கள் மற்றுமொரு ஹாஸிம் அம்லா என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

இதுவரை 102 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள முயீன் அலி, 5,984 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவற்றுள் 10 சதங்களும், 37 அரைச்சதங்களும் உள்ளடங்கும்.

எதிர்காலத்தில் இங்கிலாந்து தேசிய அணிக்குள் பிரவேசிக்கும் வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

moeen[1]

images[1]

Published by

Leave a comment