‘வே புரோட்டின்’ அடங்கிய பத்து பால்மா வகைகளில் ‘குளோஸ்ரீடியம் பொட்டுலினியம்’ பக்டீரியா இல்லை

glass-of-milk[1]கொழும்பு: சந்தையிலுள்ள பத்து ‘வே புரோட்டீன்’ அடங்கிய குழந்தைகள் மற்றும் சத்துணவு பால்மா மாதிரிகளில் Clostridium botulinium பக்டீரியா இல்லையென்பதை பொரல்லையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஊர்ஜிதம் செய்துள்ளது. இதற்கிணக்க சோதனை செய்யப்பட்ட மேற்படி பத்து குழந்தைகள் மற்றும் சத்துணவு பால்மா வகைகளின் குறித்த பட்ஜ் இலக்கங்களுக்கு உரியவை பொதுமக்கள் நுகர்வுக்காக சந்தைகளில் விற்பனை செய்ய முடியுமென்றும், சுகாதார அமைச்சு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பொரல்லையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி மேற்படி 10 பட்ச் இலக்கங்களுக்கு முரிய பால்மா மாதிரி களிலேயே Clostridium botulinium இல்லாமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட உப குழுவின் ஆலோச னைக்கு அமைய உணவு ஆலோசனைக் குழு Clostridium botulinium பக்aரியா இல்லையெனக் கண்டறியப்பட்ட மேற் படி பட்ச் இலக்கங்களுக்குரிய பால்மாக்களை சந்தைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அனுமதியைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் கீழ் செயற்படும் பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதன்படி ஏற்கனவே விற்பனை நிலையங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மற்றும் கடை உரிமையாளர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள குறித்த பட்ச் இலக்கங்களைக் கொண்ட மேற்படி பால்மா வகைகளை விற்பனை செய்யமுடியும்.

பொட்டூலீனியம் பக்aரியா சர்ச்சையினைத் தொடர்ந்து மருத்துவ ஆராய்ச்சி நிலையம் விசேட தொழில்நுட்பத்தின் கீழ் பரிசோதனைகளை மேற்கொண்டதன் பின்னர் இதனை நுகர்வுக்காக சந்தைப்படுத்துவதற்கான தீர்மானத்துக்கு வந்தது. அத்துடன் பொதுமக்கள் மேற்படி பட்ச் இலக்கங்களுக்குரிய பால்மா வகைகைளை எவ்வித அச்சமுமின்றி உபயோகிக்க முடியுமென்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 – தினகரன்

Published by

Leave a comment