வாழைச்சேனை: வாழைச்சேனை ஓட்டமாவடி மடுவத்து வீதியிலிருந்து சுமார் 11 வயது மதிக்கத்தக்க சிறுவனொருவனின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இச்சடலம் நேற்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
அடித்து கொலை செய்யப்பட்டு கற்களால் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மேற்படி சடலத்தை அப்பகுதிக்கு மாடு மேய்ப்பதற்காக சென்ற ஒருவர் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை ஓட்டமாவடி செம்மண்ணோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த விசேட தேவையுடைய மீறாலெப்பை முஹம்மட் ஹிமாஸ் (வயது 11) என்ற சிறுவனை கடந்த 17ம் திகதியிலிருந்து காணவில்லையென 18ம் திகதி வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.
கண்டெடுக்கப்பட்ட உடல் காணாமல் போன மீறாலெப்பை முஹம்மட் ஹிமாஸிடையதாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
![011-600x400[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/011-600x4001.jpg?w=600&h=400)
![03-600x400[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/03-600x4001.jpg?w=600&h=400)
Leave a comment