‘பெறுகின்ற சம்பளத்திற்காக தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமையினை செவ்வனே நிறைவேற்ற வேண்டும்’ -கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்

Meerasahib– பழுளுல்லாஹ் பர்ஹான்

கல்முனை: பெறுகின்ற சம்பளத்திற்காக தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமையினை செவ்வனே நிறைவேற்ற வேண்டும்இ நீங்கள் எனக்கு விசுவாசமாக நடக்க வேண்டிய தேவை இல்​லை ஆனால் மாநகர சபைக்கு விசுவாசமாக உங்களது கடமைகளை நிறை வேற்ற வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையில் கடமையாற்றுகின்ற காவலாளிகள் தொடர்பாக முதல்வருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான விளக்கம் கோரும் கலந்துரையாடல் நேற்று (22.08.2013) முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றபோது முதல்வர் கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்கையில், காவலாளிகள் தினமும் வெவ்வேறு இடங்களில் கடமையில் ஈடுபடுவதனால் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இடம்பெறுகின்ற சம்பவம் மற்றும் களவு என்பவற்றிற்கு விளக்கம் கூறுகின்ற பொறுப்பு குறிப்பிட்ட ஒருவருக்கு இல்லாமல் இருப்பதனால் களவுகள் பிடிபடாமல் இருப்பதோடு காவலாளிகள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்கின்றனர். இதனை நிவர்த்திக்கும் வகையில் காவலாளிகளுக்கான புதிய கடமைப் பட்டியலினை வழங்க உள்ளேன். அதற்கு அமைவாக எல்லோரும் இதய சுத்தியுடன் பொறுப்புள்ள காவலாளிகளாக கடமையாற்ற வேண்டும். கடமையினை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் தயவு தாட்சனை இன்றி தண்டிக்கப்படுவீர்கள்.

முதல்வராகிய எனக்கு மாநகர சபைக்கு நேரத்திற்கு வரவேண்டும். போகவேண்டும் என்பது கிடையாது. எனது வரவினை கண்காணிப்பதற்கு மேல் அதிகாரியும் கிடையாது, இவ்வலுவலகத்திற்கு தினமும் வராமலும் இருக்கலாம். ஆனால் எனக்கு வாக்கழித்த மக்களினால் வழங்கப்பட்ட அமாணிதத்தை பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கான சேவை திறண்பட வழங்கப்படவேண்டும் என்பதற்காக தினமும் நேரத்திற்கு இவ்வலுவலகத்திற்கு வருகின்றேன். அவ்வாறு நீங்களும் பொறுப்புணர்ச்சி உள்ளவர்களாக தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமையினை நிறைவேற்ற கடப்பாடு உள்ளவர்களாக இருக்கின்றீர்கள்.

காவலாளிகள் தங்களது கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இருப்பின் அவற்றை பொறியியல் வேலை மேற்பார்வையாளரிடம் தெரிவியுங்கள், அவர் நிவர்த்தி செய்து தருவார். அவ்வாறு அவர் நிவர்த்தி செய்து தர தவறும் பட்சத்தில் எனது கவனத்திற்கு கொண்டவாருங்கள் என முதல்வர் தெரிவித்தார்.

Published by

Leave a comment