எளிமையாக இடம்பெற்ற வசீம் அக்ரம்-செனீரா தொம்ஸன் திருமணம்

wasim_akram_shaniera_thompson_1377090560_540x540[1]– MJ

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட்  அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான வசிம் அக்ரம் 47, தனது 30 வயதான அவுஸ்திரேலிய காதலி  செனீராவை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் மக்கள் தொடர்பு ஆலோசகரான காதலி செனீராவிடம் வசிம் அக்ரம் திருமணம் செய்துகொள்வது குறித்து கடந்த மாதம் பேசினார். இதனையடுத்து இருவீட்டர் சம்மதத்துடன்  திருமணம் செய்துகொண்டனர்.

வசிக் அக்ரமின் முதல் மனைவி ஹூமா (42) நோய்வாய்பட்டநிலையில் 2009-ம் ஆண்டு சென்னையில் உயிரிழந்தார். உடல் நிலை சரியில்லாத தனது தனது வயோதிப தந்தையின் விருப்பத்திற்கு ஏற்பவும், திருமணம் செய்து கொள்ளாமல் இருவர் சேர்ந்து வாழ்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதாலும் இத்திருமணத்தை செய்ததாக வசீம் அக்ரம் கூறியிருக்கிறார்.

முன்னாள் மனைவி ஹூமாவுடன் அக்ரம்
முன்னாள் மனைவி ஹூமாவுடன் அக்ரம்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாசிம் அக்ரம்,  லாகூரில் சென்ற 12-ம் தேதி எளிமையாக நடந்த நிகழ்வில் நான் செனீராவை திருமணம் செய்துகொண்டேன். இது எனக்கு, எனது மனைவி, மகன்களுக்கும் ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்த வசீம் அக்ரம், தனது முயற்சியாலும், அவதானத்தாலும் குறித்த நீரிழிவு நோயிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வந்தார். அதன் பின்னர் சில நாடுகளிலும் இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், குணப்படுத்துவதற்குமான தொண்டார்வ அமைப்புக்களை நிறுவிவந்தார். தற்பொழுது ஓர் கிரிக்கட் வர்ணணையாளராக உலக தொலைக்காட்சிகளில் வலம்வந்துகொண்டிருக்கின்றார்.

செனீரா தொம்ஸன் இஸ்லாத்தைத் தழுவி, தற்பொழுது உறுது மொழியைக் கற்றுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

wasim_akram_shaniera_thompson_1377090560_540x540[1]
இன்னாள் மனைவி செனீராவுடன் அக்ரம்

Published by

Leave a comment