அத்துமீறிய சிங்களகுடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து த.தே.கூ ஆர்ப்பாட்டம்

– பழுளுல்லாஹ் பர்ஹான்

DSC00298[1]மட்டக்களப்பு: மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவிட்குட்பட்ட படுவான்கரை கெவிலியாமடு, புளுகுணாவை உள்ளிட்ட தமிழ் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அந்தகுடியேற்றத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் கோரி இன்று புதன்கிழமை மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டஎதிர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது.

‘நீதிஅநீதியைக் களையட்டும் நியாயம் மலரட்டும்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ் எதிர்ப்புஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம், பிரசன்னா இந்திரகுமார், துரைராஜசிங்கம், ஜனா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஆதரவாளர்கள் பொதுமக்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது’ மீறாதே மீறாதே சட்டத்தை மீறாதே?, அரசஅதிபரே! சோரம் போகாதே?, அத்துமீறிய குடியேற்றத்திற்கு எதிராகசட்ட நடவடிக்கைஎடு, கதிரைக்காக காணி அபகரிப்புக்கு துணை போகாதே?, சமாதானம் என்ன சாத்தானின் ஆக்கிரமிப்பா?, அமைச்சரின் முகஸ்துதிக்காக அநீதிக்குது ணைபோகாதே?, காணி அபகரிப்பை நிறுத்து!, சட்டம் ஆளுநரிடமா? அமைச்சரிடமா? அதிகாரியிடமா? புத்தபிக்குவிடமா? இரானுவத்திடமா? எடுபிடிகளிடமா? உள்ளிட்டவாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவண்ணமும் கோஷங்களை எழுப்பிய வண்ணமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் சட்டவிரோத அத்துமீறிய குடியேற்றத்தை நிறுத்தவேண்டும் என மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு ஒருமகஜரொன்றை ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திலேயே பட்டிப்பளைபிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினத்திடம் மட்டு த.தே.கூ பாராளுமன்றஉறுப்பினர் பொன் செல்வராசாகையளித்தார்.

இதேவேளை குறித்த எதிர்ப்புப் போராட்ட ஸ்தலத்திற்கு விரைந்தகளுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்ணாயக்கவிடம் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்துமீறிய இந்தகுடியேற்றத்தை நிறுத்துமாறு தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC00298[1]

DSC00303[1]

DSC00348[1]

 

Published by

Leave a comment