தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான தம்பிராசா தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – ஐ.ம.சு.மு முதன்மை வேட்பாளர் சி. தவராசா

– பழுளுல்லாஹ் பர்ஹான்

attack_bang_CI[1]கொழும்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான தம்பிராசா தாக்கப்பட்ட சம்பவத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளரான சின்னத்துரை தவராசா வன்மையாகக் கண்டித்துள்ளார்.   இன்றைய தினம் யாழ்.மின்சார நிலைய வீதியில் கூட்டமைப்பினர் வேட்பாளரான தம்பிராசா தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வெளியிட்டுள்ள கண்டன அறிகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடமாகாண சபைத் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெற அனைவரது ஒத்துழைப்பும் அவசியமானது என்றும், மேலும் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் எங்கும், யாருக்கு எதிராகவும் நடைபெறக் கூடாது. தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடும் அனைவரும்; சுதந்திரமாகவும், பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாமலும் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Published by

Leave a comment