ஈமானுக்காய் போராடும்
என்
இரத்த உறவுகளே..!
எகிப்தின்
ஈமானிய நெஞ்சங்களே..
நீங்கள் சிந்தும்
ஒவ்வொரு சொட்டு இரத்தமும்
எகிப்தின்
ஈமானியச் சுடருக்கு
எண்ணையாய் மாறும்
அந்த நாள்
வெகு தூரத்தில் இல்லை.
தஹ்ரீர் சதுக்கம்
இன்னும் உங்களை
தாங்கி நிற்கிறது
இதயமாய்..
நீங்கள்
புதைக்கப்படவில்லை
விதைக்கப்படுகிறீர்கள்
ஒருநாள்
ஈமானிய மரமாய்
எழுந்து வரப் போகிறீர்கள்.
நீங்கள்
இரத்த வெள்ளத்தில்
துடித்து இறப்பதையும்
தீயில்
கருகி மடிவதையும்
கானொளியில் காணுகையில்
கல்புகள்
வெடித்துப் போகிறது.
பஸ்பரஸ் குண்டுகளுக்குள்
பலியாகிப்போகும்
என் உறவுகளே..
உங்களின்
அழுகுரலும்இ அவலக்குரலும்
அடங்குவதற்குள்ளாக
அழிந்து போவார்கள்
அந்த
அநியாயக்காரர்கள்..
பால்குடிக்கும்; குழந்தைகளை
பலிகொடுத்த பின்பும்
வீரத்தோடு போராடும்
எங்கள்
தாய் குலத்தின் தைரியமும் இ
கலிமாவின் கம்பீரமும்
கட்டாயம் ஒருநாள்
ஈமானிய புரட்சிக் கொடியை
எகிப்தில் ஏற்றி வைக்கும்
என்
இரத்த உறவுகளே..
உங்களுக்காய்
தொழுகிறோம்
நோன்பு நோற்கிறோம்
அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.
கூடவே
உங்கள் தியாகத்திற்கும்
ஆடி பணிகிறோம்.

Leave a comment