எகிப்தில் சமாதானம் நிலைநாட்டப்படும்: பிரித்தானியா

_69333499_69333498[1]-MJ

லண்டன்: எகிப்தில் இடம்பெற்றுவரும் இரத்தக் கலவரத்தில் இதுவரைக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இராணுவத்துக்கும் மொர்ஸியின் ஆதரவாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட இக்கலவரம், இரத்த ஆறாய் எகிப்தில் ஊற்றெடுக்கின்றது.

எகிப்தின் இராணுவத்தின் மிலேச்சத்ததனமான தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட இதுவரைக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இன்று 80பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

பள்ளிவாயல்கள், பாடசாலைகள் என்பன எகிப்தின் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு அழிக்கப்படுவதுடன், இராணுவத்திற்கு எதிராக செயற்படுவோர்களை சுட்டுப் பொசுக்கும் நிலைக்கு இன்றைய எகிப்தின் நிலவரம் இருக்கின்றது.

இதற்கிடையில், எகிப்தில் சமாதானம் நிலைநாட்டப்பட்டு விரைவில் அங்கு இயல்பு வாழ்க்கை கொண்டுவரப்படும் என்பதாக பொதுநலவாய, வெளிநாட்டு பேச்சாளர் சற்று முன்னர் தெரிவித்திருக்கின்றார்.

லணடனில் உள்ள எகிப்து தூதரகத்திற்கு முன் மொர்ஸியின் ஆதரவாளர்களால் தொடர்ந்து இடம்பெற்று வரும் ஆரப்பாட்டங்களைத் தொடர்ந்து, இந்த முடிவை ஐரோப்பிய நாடுகளின் ஊடாக தாம் மேற்கொள்ளவிருப்பதாக பிரித்தானியாசற்று முன்னர்  தெரிவித்திருக்கின்றது.

Published by

Leave a comment