– கொழும்பு ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலையில் இருந்து- பழுலுல்லாஹ் பர்ஹான்
கொழும்பு: காத்தான்குடி நகர சபையும் கொழும்பு ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலையும் இணைந்து கடந்த 14-07-2013 திகதி காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடாத்திய இலவச இருதய சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட காத்தான்குடியேச் சேர்ந்த 5வயது வறிய சிறுவர் ஒருவருக்கும் 16 வயது வறிய இளைஞர் ஒருவருக்கும் 1 ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இருதய சத்திரசிகிச்சையை கொழும்பு ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலை பிரபல இருதய சத்திரசிகிச்சை நிபுனர் டாக்டர் விவேக் குப்தா இலவசமாக செய்யவுள்ளார்.
1 ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இலவச இருதய சத்திரசிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்ட சிறுவரையும் இளைஞரையும் வைத்தியசாலையில் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று 16-08-2013 வியாழக்கிழமை கொழும்பு ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சை அலுவலகத்தில் இடம்பெற்றது.
வைத்தியசாலையில் ஒப்படைக்கும் நிகழ்வில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் மஞ்சுல காருணாரத்ன , ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலை வைத்திய பணிப்பாளர் டாக்டர் றுவான் சேனதிலக , ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலையின் கிளினிக் பணிப்பாளர் டாக்டர் அனில் பெரயரா, கொழும்பு ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலை பிரபல இருதய சத்திரசிகிச்சை நிபுனர் டாக்டர் விவேக் குப்தா, ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலை சந்தைப்படுத்தல் முகாமையாளர் சரத் ஹேட்டியாராச்சி, மற்றும் இலவச சத்திரசிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்ட சிறுவர் மற்றும் இளைஞரின் பெற்றோர்கள் ,ஊடகவியலாளர்கள் ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிண்ணியாவில் வடை விற்கும் ஒரு ஏழை தொழிலாளியின் மகன் 16 வயது இளைஞர் அம்ரின் அஹமட் மற்றும் வவுணியாவில் கடையில் வேலை செய்யும் ஏழை தொழிலாளியின் மகன் 5வயது சிறுவன் அஸ்ரி அஹமட் ஆகியாருக்கான குறித்த 1 ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இலவச இருதய சத்திரசிகிச்சை காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பு ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலை பிரபல இருதய சத்திரசிகிச்சை நிபுனர் டாக்டர் விவேக் குப்தாவினால் ஒரு வாரத்துக்குள் இலவச இருதய சத்திரசிகிச்சை செய்யப்படவுள்ளது.
இதுவரையில் கொழும்பு ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலை பிரபல இருதய சத்திரசிகிச்சை நிபுனர் டாக்டர் விவேக் குப்தாவினால் 14 வறிய சிறுவர்களுக்கு இலவசமாக இருதய சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/112.jpg?w=780&h=585)
![4[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/411.jpg?w=780&h=585)


Leave a comment