குருநாகல்: குருநாகல் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் தொடர்பான அறிவித்தல் பலகையை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,. குருநாகல் மாவத்தகம ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘அமைதி பள்ளிவாயல் முன்னாள்’ என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகை சிங்கள பௌத்த மக்கள் வாழும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால் அதனை அகற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் சமர்பித்த கோரிக்கையின் பின்னர் தற்பொழுது குறித்த அடையாளப் பலகையை அகற்ற குருநாகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக பௌத்த மக்களிடையே பதற்ற நிலை தோன்றியிருப்பதாக மாவத்தகம பொலிஸார் முறையிட்டிருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் நாமல் பெரேரா, குறித்த அறிவிப்பு பலகையை அகற்றுமாறு உத்தரவிட்டார்.
இலங்கையில் முஸ்லிம்களை நோக்கி பல விதமாக பௌத்தக் கலகக்காரர்களால் திசைதிருப்பப்படும் மற்றுமொரு நடவடிக்கை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment