ஜம்மு காஷ்மீரில் தொடரும் மோதல்கள்

india-OiT

பூஞ்ச்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய- பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது. பூஞ்ச் பகுதியில் இந்திய நிலைகள் மீது நேற்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவத்தினர் 3 பேரும் சில பொதுமக்களும் படுகாயமடைந்தனர்.

கடந்த ஒருவார காலத்தில் பாகிஸ்தான் மேற்கொண்ட 10வது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் இதுவாகும்.இதைத் தொடர்ந்து இந்திய தரப்ப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதனிடையே நேற்று இரவு 7.30 மணிக்கு பாகிஸ்தான் கனரக ஆயுதங்கள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியத் தரப்பில் வலுவான பதிலடி கொடுக்கப்பட்டது. இருதரப்பினரிடையேயான மோதல் விடிய விடிய நிகழ்ந்துள்ளது. இதனால் எல்லைப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றமாகவே இருந்து வருகிறது.

Published by

Leave a comment