கொழும்பு: ஜப்பானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி சுகுகோ (TSukugo) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இம்மாதம் 19ஆம் திகதி இலங்கை வருகிறார் . 27 வயதான இளவரசி (TSukugo) சுகுகோ ஜப்பானிய இளவரசரான தக்கமடோ (Takamado) தம்பதிகளின் மூத்த புதல்வியாவார். இலங்கைக்கு விஜயம் செய்யும் இளவரசி சுகுகோ, கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபடுவார். கண்டி எசல பெரஹராவையும் கண்டுகளிப்பார்.
இளவரசி சுகுகோ,ஜயசிறி மஹா போதியையும் வழிபடுவதற்காக அனுராதபுரம் செல்லவுள்ளார். பின்னவலையிலுள்ள யானைகள் சரணாலத்திற்கும் செல்லவிருக்கிறார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் கடந்த மார்ச் மாதம் ஜப்பானுக்கு விஜயம் செய்த போது விடுத்த அழைப்பின் பேரில் இலங்கை வரும் ஜப்பானிய இளவரசி, இம்மாதம் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். GA
Leave a comment