மருதமுனை: கடந்த ரமழான் மாதத்தில் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்இய்யா) மருதமுனைக் கிளை நடாத்திய SAFTA (Spiritual Awakening For Teen Ages) இளைஞர்களுக்கான ஆண்மீக விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறை பாடநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருதமுனை ஜம்இய்யா காரியாலயத்தின் கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் மருதமுனைக் கிளை அமைப்பாளர் ஜே.எம். ஜெஸான் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில், மருதமுனை மருதமுனை அந்நஹ்ழா அறபுக்கல்லூரியின் அதிபர் அல்-ஹாஜ் ஏ.எல். மீராமுகைதீன் பிரதம அதிதியாககவும் விஷேட அதிதிகளாக இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் மருதமுனை மன்ற நாஸிம் அஷ்ஷெய்க் அப்துல் கமால் (இஸ்லாஹி) , ஜம்இய்யாவின் கிழக்குப்பிராந்திய நாஸிம் ஐ.எம். இப்திகார், ஜம்இய்யாவின் மத்திய சபை உறுப்பினர்களான ஆஷிக், றுடானி ஸாஹிர் அகியோரும் மற்றும் ஜமாஅத் உறுப்பினர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது மாணவர்களுக்கு பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் விரிவுரையாளர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதாக ஜம்இய்யாவின் கிழக்குப்பிராந்திய நாஸிம் ஐ.எம். இப்திகார் தெரிவித்தார்.




Leave a comment