கொழும்பு: பொது மக்கள் பொலிஸாருடன் தொடர்பு கொள் வதற்கான ‘119’ என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நாளாந்தம் 6 ஆயிரம் தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக பொலிஸ் மா அதிபரின் கட்டளை மற்றும் தகவல் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம். தர்மசேன தெரிவித்தார்.
இருப்பினும் குறித்த இலக்கத்திற்கு 20 தொலைபேசிகள் மாத்திரமே சேவையிலிருப்பதனால் நாளொன்றுக்கு 2 ஆயிரம் அழைப்புகள் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு வரப்படுவதாகவும் அவர் கூறினார்.
இவற்றுள் 200 தொலைபேசி அழைப்புக்கள் பொய்யானவை எனச் சுட்டிக்காட்டிய நிலையத்தின் பணிப்பாளர் மேலும் 200 அழைப்புக்கள் எந்த பிரயோசனமும் அற்றவையெனவும் கூறினார்.
எஞ்சிய 1600 தொலைபேசி அழைப்புக்களும் உடனடி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து பாரிய உயிரிழப்புக்கள், கொலை, கடத்தல் மற்றும் சட்டவிரோதச் செயல்களை உரிய நேரத்தில் தடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடிந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆரம்பத்தில் ‘119’ என்ற தொலைபேசி இலக்கத்திற்கு இரண்டு தொலைபேசிகள் மாத்திரமே சேவையிலீட படுத்தப்பட்டி ருந்தன.
மக்கள் பொலிஸ் திணைக்களம் மீது வைத்துள்ள நம்பிக்கையை கருத்திற்கொண்டதையடுத்த குறித்த இலக்கத்திற்கான தொலைபேசிகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிக்கப்பட்டு ள்ளது. எப்போதும் தொலைபேசிகள் சேவையிலிருப்பதாலேயே ஏனைய 4 ஆயிரம் அழைப்புக்களுடன் எம்மால் தொடர்பு கொள்ள முடிவதில்லை.
எனினும் ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் கோடிக்கணக்கில் செலவழித்தாயினும் பொலிஸ் மா அதிபரின் கட்டளை மற்றும் தகவல் பிரிவை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு பொலிஸ் திணைக்களம் உத்தேசித்துள்ளது.
மேலும் குறித்த பிரிவினர் 011 854885 அல்லது 011 854880 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கூடாக இயற்கை அனர்த்தம் குறித்து பொலிஸ் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெச்சரிக்கையை எமக்கு விடுக்க முடியும். எமது இந்த அழைப்புக்கள் 24 மணித்தியாலமும் சேவையிலிருப்பதுடன் எமக்கு தகவல் கிடைத்து 02 நிமிடங்களுக்குள் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையத்திற்கும் உரிய தகவலை வழங்கி பொலிஸாரையும் அவர்களூடாக பிரதேச மக்களையும் உஷாரடையச் செய்ய முடியுமெனவும் அவர் கூறினார்.
-தினகரன்
Leave a comment