மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இரு கிராமங்களுக்கு முன்னாள் கிழக்கு முதல்வரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்மொழிவின் பேரில் கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் தலா 200 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
இதற்கமைவாக பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் முனைக்காடு கிராமமும், கோரளைப்பற்று பிரதேசத்தில் பேத்தாழை கிராமமும் இத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வாழ்வாதாரம், மைதானப் புனரமைப்பு, வீதிகள் புனரமைப்பு, பாடசாலை புனரமைப்பு, கலாசார அபிவிருத்தி உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் இதில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment