கிண்ணியா: மக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் திண்மக்கழிவு முகாமைத்துவ நட்புறவு ஒன்றுகூடல் கிண்ணியா நகரசபை தவிசாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நேற்று மாலை (14.08.2013) கிண்ணியா நகசபையில் இடம்பெற்றது.
கிண்ணியா நகரசபை முன்னெடுக்கும் திண்மக்கழிவு முகாமைத்துவ விடயங்கள் சம்பந்தமாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் முன்னெடுக்கும் குறித்த விடயதானம் சுற்றாடல் நட்புறவான முறையில் எதிர்கால சந்ததியினர் பயன்படுத்தும் வகையில் சேதனப் பசளை தயாரிப்பு சம்பந்தமாகவும் அமைந்திருந்தது. இக்கலந்துரையாடலில் கொழும்பிலிருந்து வருகை தந்த கரையோர பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.



Leave a comment