காத்தான்குடியை சிறப்பிக்கும் நோன்புப் பெருநாள்மாத திருமணப் படலங்கள்….

Muslim-Wedding-Dresses-2013[1]– நமது உள்ளுர் செய்தியாளர்

காத்தான்குடி: நோன்புப் பெருநாள் மாதம். தொழில் நிமித்தம்  வெளிநாடுகளிலும் வெளி ஊர்களிலும் வசிக்கும் சொந்தங்கள் வருடத்தில் ஒரு முறையாவது தங்களது உறவினர்களைச் சந்தித்துக் கூடிக்குலாவும் ஒரு புனித மாதம்தான் காத்தான்குடியைப் பொருத்தமட்டடில் இந்த ஷவ்வால் மாதமாகும்.

ஷவ்வால் 6 நோன்புகள் சென்றதிலிருந்து திருமணப் படலங்கள் காத்தான்குடியை அலங்கரித்துச் செல்லும். நோன்புக்கு முன்னர் பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அனைத்தும் நோன்புப் பெருநாள் மாதம் எனப்படும் ஷவ்வால் மாதத்தில் இடம் பெறுவது காத்தான்குடி மரபு.

இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஜூம்ஆ பள்ளிவாயல்கள் உட்பட உள்ளுர் பள்ளிவாயல்களிலும் சுப்ஹூ தொழுகை, அஸர் தொழுகைகளின் பின்னர் ஏராளமான திருமணங்களுக்கு பள்ளிவாயல்களில் அனுமதி பெறப்பட்டிருக்கின்றன.

இன்று வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் நிச்சயிக்கப்பட்டிருந்த ஏராளமான திருமணங்கள்  இடம்பெற இருக்கின்றன. வெளியூர்களில் தொழில் புரியும் அநேகமான  காத்தான்குடி வர்த்தகர்கள் இந்த ஞாயிற்றுக்கிழமையுடன் குடும்ப சகிதம் சென்றுவிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இம்மாதம் முடியும்வரை ஏராளமான திருமணங்கள் இடம்பெற இருக்கின்றன.

மணமகன் மணமகள் இல்லங்களிலும், மற்றும் கடற்கரை கொட்டகைகள், திறந்த வெளிகள், மற்றும் தனிநபர் வரவேற்பு இல்லங்களிலும் திருமண விருந்துகள் இடம்பெற இருக்கின்றன.

ஓர் சிறுபெருநாள் போன்று உறவுகளையும் சொந்தங்களையும் இணைத்துச்செல்லும் காத்தான்குடி திருமண படலங்களுக்கு நிகர் காத்தான்குடியே!

காத்தான்குடியைப் பொருத்தமட்டில் நோன்புப்பெருநாள் மாதம், ஹஜ்ஜூப் பெருநாள் மாதம் மற்றும் கொண்டாட்ட (ரபியுல் அவ்வல்) மாதம் ஆகிய 3 காலங்களிலும் திருமணங்கள் அதிகமாக இடம்பெற்றுவருகின்றமையும் பண்டைய மரபுகளில் ஒன்றாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Muslim-Wedding-Dresses-2013[1]

Published by

Leave a comment