மட்டக்களப்பு: மட்டக்களப்பு கல்குடா வலய கல்வி அபிவிருத்தி தொடர்பான விஷேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை ஐனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள ஐனாதிபதியின் ஆலோசகர் காரியாலயத்தில் நடைபெற்றது.
வாகரை, வாழைச்சேனை, செங்கலடி, கிரான் பிரதேசங்களை உள்ளடக்கிய கல்குடா வலயத்தில் உள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்தலும் க.பொ.த (சா.த) க.பொ.த (உ.த) பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கும் பாடரீதியிலான பெறுபேறுகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் விஷேடமாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.’கிருஸ்ணராஜா, உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி குலேந்திரன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொருளாளர் திரு.ஆ.தேவராஜா, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் திரு.க.கேயாகவேள் மற்றும் அனைத்து கல்குடா வலயக் கல்வி அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment