அப்ரிடியின் கிரிக்கட் வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படம்: தகாத காட்சிகளால் அப்ரிடி வருத்தம்!

main-hoon-shahid-afridi-13[1]– MJ

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமும், உலகின் அதிரடி வீரருமான ஷஹீட் அபிரிடியின் கிரிக்கட் வரலாற்றை பின்னணியாகக் கொண்டு பாகிஸ்தானில் எடுக்கப்பட்டு வரும் படம் ‘மெய்ன் ஹூன் அப்ரிடி’ (நான் அப்ரிடி) பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷஹீட் அபிரிடி போன்று ஓர் கிரிக்கட் வீரராக புகழ்பெற வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு இளைஞனின் கதை தான் மெய்ன் ஹூன் அப்ரிடி.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைக் கிராமத்தலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குள் நுழையும் ஓர் ஏழை வீரரனின் கதையாக இத்திரைப்படம் கச்சிதமாக எடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த படத்தில் ஹீரோ நைட் கிளப்பில் ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து முத்தமிடும் காட்சி உள்ளது. இந்த காட்சியை படத்தின் டிரெய்லரில் வைத்துள்ளனர். இதே போல் இன்னும் தகாத சில காட்சிகளும் இப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இதைப் பார்த்த அப்ரிடி எனது கிரிக்கட் வாழ்க்கையின் உண்மைக்குப் புறம்பான காட்சிகள் இப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பது பற்றி விமர்சித்திருப்பதுடன் தனது கவலையையும் தெரிவித்துள்ளார்.

குறித்த படம் குறித்து அவர் கூறுகையில்,

மெய்ன் ஹூன் அப்ரிடி படம் முற்றும் முழுதாக என் வாழ்க்கையைப் பற்றியது அல்ல. குழந்தைகள் மத்தியில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் தான் நான் இந்த படத்திற்கு அனுமதி அளித்தேன். ஆனால் அந்த படத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத காட்சிகள் இருக்கக் கூடாது. பல குடும்பங்கள், குழந்தைகள் எனக்காக இந்த படத்தை பார்க்கச் செல்வார்கள். அவர்கள் படத்தை பார்த்துவிட்டு வருத்தப்படக் கூடாது. அதனால் அந்த காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியாக்குமாறு அப்ரிடி சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டிருக்கின்றார்.

main-hoon-shahid-afridi-13[1]

Published by

Leave a comment