யாழ் ரயில் அடுத்த மாதம் கிளிநொச்சி செல்லும்

Sri_Lankan_train,Northern_Line,Sri_Lanka[1]கிளிநொச்சி: ஓமந்தைக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான ரயில் பாதைப் புனரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் மூன்று சரக்கு ரயில்கள் பரீட்சார்த்த பயணத்தை மேற்கொண்டு நேற்று கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடைந்தன.

1990ஆம் ஆண்டின் பின்னர் வடபகுதிக்கான ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டன. 1990ஆம் ஆண்டின் பின்னர் கிளிநொச்சி ரயில் நிலையத்துக்கு நேற்றையதினமே முதன் முறையாக ரயில்கள் சென்றன.

பரீட்சார்த்த பயணத்தை மேற்கொண்டிருந்த மூன்று சரக்கு ரயில்களும் நேற்றுப் பகல் கிளிநொச்சி ரயில்  நிலையத்தை சென்றடைந்தன.

யுத்த காலத்தில் ரயில் தண்டவாளங்கள் கழற்றப்பட்டு புலிகளால் பயன்படுத்தப்பட்டன. இந்த நிலையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் மீள்குடியேற்றங்கள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டுவந்த சூழ்நிலையில்- இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஓமந்தை முதல் கிளிநொச்சி வரையான ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் பூர்த்தியடைந்திருப்பதுடன்- கிளிநொச்சி ரயில் நிலையத்தை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கிளிநொச்சி வரையான ரயில் பாதை பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் ஓமந்தைக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான பகுதிகளில் ரயில் நிலையங்களையும்- சமிக்ஞை விளக்குகளை அமைக்கும் பணிகளும் தற்பொழுது இடம் பெற்று வருகின்றன.

அடுத்த மாதத்துக்குள் கிளிநொச்சிவரை பயணிகள் ரயில் சேவையை ஆரம்பிக்க முடியுமென ரயில்வே திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. GA

Published by

Leave a comment