ஜகார்த்தா: இந்தோனேசியாவில் தனிம்பார் தீவில் உள்ள சாம்லேகியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக இந்நாடுகள் தெரிவித்திருக்கின்றன.
கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
திபெத்தின் எல்லைப்பகுதியான ஜேகாங் மற்றும் மர்காம் பகுதியிலும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கும் ரிக்டெர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின பொதுமக்கள் வீடுகளை விட்டு அச்சத்துடன் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சேதமதிப்பு பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
![14-1360836132-indonesiaearthmap-600[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/02/14-1360836132-indonesiaearthmap-6001.jpg?w=150&h=112)
Leave a comment