‘யார் நீங்கள்….?’

முஸ்லிம்களின் சமகால சூழலைக் கருத்திற்கொண்டு இக்கவிதை பிரசுரிக்கப்படுகிறது.

grandpass– முஸ்லிம் சமூகம், இலங்கை

பள்ளிவாயலா!
எங்குடைத்தனர்?
இதுவரை
கேள்விப்படவே இல்லையே-
நாங்கள்!

சமாதானம் போதித்த
போதி பகவான்
‘மஹிந்த பெருமான்’
ஆட்சி இது!

ஆட்சிமீது
அளவிலா அன்பு கொண்டவர்கள்
அதனால்
சமூகம் மீது
அளவில்லா அக்கறையற்றவர்கள்
நாங்கள்
—-
மூடுங்கள் உங்கள் வாய்களை
வீண்பழி சுமத்தாதீர்கள்!
வசைமழை பொழிந்தாலும்
வாலி பிடிப்தை
விடாதவர்கள்!

நேற்றைய பெருநாளில்தான்
ஜனாதிபதியும்
பிரதமரும்
எங்கள் சமூகத்துக்கு
சமாதான மலர்களைத்
தூவிச் சென்றனர்.

இது ஒரு
வெளிநாட்டுச் சதி!-
அதனால் வாய்மூடி
பொறுமை காக்கவும்!

நாங்கள்தான்
உங்களின் தலைவர்கள்
எங்களை நீங்கள்
மதிக்க வேண்டும்!
மதிக்காவிட்டால்-அவர்கள்
மிதித்துவிடுவார்கள்!!

இறை இல்லத்தில்
பன்றி இறைச்சியை வீசட்டும்!
அங்கு-
மனித மாமிசத்தைத்தான்
புசிக்கட்டும்
அதனால் உங்களுக்கு என்ன?
எங்களுக்குதான் என்ன???
—–
வீடு செல்லுங்கள் அமைதியோடு
நாங்கள்தான் அமர்ந்து
பேசுவோம்
சிம்மாசனத்தில்!
அதன் பின்னர்
அறிக்கையும் விடுவோம்!!

வானலை இருக்கு
வலைத்தளம் இருக்கு
எங்களின் தேவைக்கு
இது பௌத்தநாடு
விரும்பினால் இருங்கள்
இல்லாட்டி வெளியேறுங்கள்!
—-
ஆளுமையில்லா
முஸ்லிம் சமூகத்தை
ஐம்பது வருடங்களாய்
காத்து வருகிறோம்.
புதிதாய் முளைத்து
எங்களை விரட்ட 
யார் நீங்கள்?

புறப்படுங்கள்
உங்கள் வீடுகளுக்கு
பொய்கூறாமல் சென்றுவிடுங்கள்
பொதுபலத்தை விட்டுவிடுங்கள்
போராட்டத்தை எரித்துவிடுங்கள்!!!

இவ்வண்ணம்,

உங்கள் கீழ்படியா
இலங்கை முஸ்லீம் தலைவர்கள்,கொழும்பு

Published by

Leave a comment