5 நாட்களாக கட்டுவன கற்குகைக்குள் மறைந்திருந்த இளைஞனும் சிறுமியும்!

rockகட்டுவன: ரன்மல வனாந்தரத்திலுள்ள கற்குகை ஒன்றுக்குள் ஐந்து தினங்களாக மறைந்திருந்த காதல் ஜோடியொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். 18 வயதான இளைஞனும் 15 வயது சிறுமி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேற்படி கற்குகைக்குள் மறைந்திருந்த காலப்பகுதியில், இளைஞனின் தந்தையே அவர்களுக்கு உணவு வழங்கி கவனித்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இவ்விருவரும் வலஸ்முல்ல நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து, அவ்விளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், மேற்படி சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.jpc

Published by

Leave a comment