‘மட்டு பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திரன் இனக்குரோதத்துடன் செயற்படுகின்றார்’- தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விபரிக்கிறார் ஜுனைட் நளீமி

junaid naleemi– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: கடந்த இருநாட்களாக ஏற்பட பிறைக்குழப்பம் ஓரளவு சிந்தனையை விட்டு அகழவேண்டும் என்பதற்காக ஒரு மாற்று சூழலில் பெருநாளை கொண்டாடலாம் என்று இன்று எனது உறவினருடன் காத்தான்குடிக்குச் சென்றேன்.  காத்தான்குடி நகர வரவேற்பு பதாதைக்கருகில் போக்குவரத்து பொலிஸார் ஒருவர் எனது மோட்டார் சைக்கிலை இடைமறித்தார். 

‘மக்களுக்காக சிநேக பூர்வ பொலிஸ் சேவை’ என்ற மகுடத்தின் கீழ் முஸ்லிம்களுடன் இப்தார் நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டவர்கள் இன்றும்  பெருநாள் தினங்களில் ஒன்றாகையால் இனிப்புக்களை தந்து காத்தான்குடிக்குள் வரவேற்பு செய்யப்போகிறார்களோ என்ற என்னத்துடன் சைக்கிளை ஓரமாக நிருத்தினேன். அருகில் வந்த ஒரு மோட்டார் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் எனது வாகன சாரதி பத்திரத்தை கேட்டார்.

நானும் வழங்கினேன். அதனை எடுத்துக்கொண்டு விரு விரு என்று நடந்தவர் தமது வழக்குப்பதிவு புத்தகத்தில் ஏதோ எழுதி விட்டு ஒறு பத்திரத்தை நீட்டினார். எதற்காக என்று நான் வினவிய போது அவரால் எனக்கு தமிழில் பதில் அழிக்க முடியவில்லை. அது ஒரு குற்றப்பத்திரம் என்று மட்டும் எனக்கு தெரிந்தது. அதில் சிங்கள மொழியில் கூட்டெழுத்தில் எழுதப்பட்டதினை என்ன குற்றம் என நான் வினவிய போதும் அவரால் தமிழில் விடைபகர முடியவில்லை.

ஆனால் அவர் கால் கால் என்று என்னிடம் கூறியதனை வைத்து எனது உறவினர் பெண் என்ற படியினால் தனது கால்கள் இரண்டையும் ஒரேபக்கத்தில் அமர்ந்து செல்வதற்கு வசதியாக வைத்து வந்த குற்றம் என கூறுவதனை ஓரளவு உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்த நல்ல வரவேற்பினையடுத்து காத்தான்குடி நகரபிதாவுடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு மாவட்டத்தில் எங்கும் இல்லாத சட்டம் எப்போது உங்கள் பிரதேசத்தில் மாத்திரம் அமுல்படுத்தப்பட்டது என வினவினேன்.

குறித்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டேன். வாழைச்சேனையில் இருந்து காத்தான்குடி எல்லைவரை பல பொலிஸ் நிலையங்களையும், மோட்டார் போக்குவரத்து பொலிஸாரையும் தாண்டி வந்த போதும் எந்த பொலிஸ் உத்தியோகத்தரும் என்னை நிருத்தவு மில்லை. இது குற்றம் என சொல்லவு மில்லை என்பதனை தெரிவித்தேன். அதற்கு நகர முதல்வர் இங்கு இருக்கின்ற பிரதி பொலிஸ்மா அதிபர்தான் இந்த கெடுபிடிகளை காத்தான்குடி மக்கள் மீது திணிக்கின்றார். பெருநாள் தினமான நேற்றும் இன்றும் பல இடையூருகளை இப்பிரதேசத்தில் ஏற்படுத்தியுள்ளார்.

இன்று காலை இது போன்ற பல பிரச்சிணைகள் இடம்பெற்ற போது சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சற்று கெடுபிடிகளை தளர்த்துவதாக கூறி பணிப்புரை வழங்குவதாக வாக்குறுதியளித்து சில மணிநேரங்களின் பின்னர் மீண்டும் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திரன் இனக்குரோதத்துடன் கெடுபிடிகளை தினிக்கின்றார் என குறிப்பிட்டார்.

நாட்டில் அண்மைக்காலமாக பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் தரப்பின் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளும் மக்களுடனான கடு கடுப்பான போக்கும் பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைவதுடன் ஒட்டு மொத்த பாதுகாப்புத்தரப்புக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதாகவே அமைந்து வருகின்றது. முப்படைகளின் தியாகங்களுக்கு மத்தியில் குறிப்பாக இராணுவத்தின் பாறிய தியாகங்களுக்கு மத்தியில் வென்றெடுத்த சாமாதான சூழலை தக்க வைத்துக்கொள்ள இன்று இராணுவம் மக்களின் நன்பனாக செயற்பட்டு சில போது பொலிஸார் செய்ய வேண்டிய கடமைகளைக்கூட செய்து வருகின்றது.

பொதுமக்கள் உறவை நட்புரீதியானதும் நம்பகத்தன்மையானதுமாக மாற்ற மிக கவனமாகவும் அழகிய அனுகு முறைகளுடன் இராணுவம் தியாகத்துடன் செய்து வரும் வேளையில் பொலிஸாரின் இத்தகைய போக்கு அரசுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாய் அமைகின்றது.

யுத்தத்திற்கு பின்னால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தற்போது மெது மெதுவாக சிவில் நிர்வாகத்தை நோக்கி பழக்கப்பட்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் பின்னால் பயணிக்கும் பெண்கள் இரண்டு பக்கங்களும் தமது கால்களை வைத்து பயணிக்க வேண்டும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திரன் திடீர் அறிவிப்பு செய்தமை மாவட்டத்தில் பல்வேறு தரப்புக்களினாலும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது.

சட்டரீதியாக அவ்வாறுதான் செல்ல வேண்டும் என்பது எழுத்துருவாக இருந்தாலும் கால சூழ்நிலைக்கேற்ப சட்டங்களும் நெகிழ்ந்து கொடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. அதிவேகம் குறித்து சாதாரண பொதுமகன் குற்றவாளியாக கருதப்படுவது போன்று அமைச்சர்களதும் மந்திரிகளதும் வாகணங்கள் அவற்றிட்கு விதிவிளக்காக அமைகின்றன.

ஹெல்மட் அணிவது சட்டமாக இருக்கின்ற போதும் பௌத்த மதகுருவினை தலைக்கவசம் அணியாத குற்றத்திற்காக கைது செய்ய முடியாது. அது பௌத்தமத்தில் மதகுருமாருக்குள்ள சிறப்பம்சம். அவர்கள் கண்ணியப்படுத்தப்படுகின்றனர் அது தேவையானதே. எழுதப்படாத விலக்குகளைப்போன்று இவ்விடயத்திலும் தமிழர், முஸ்லிம் கலாசார பாரம்பரியங்களை கவனத்தில் எடுத்தல் சட்டம் மீதான மக்களின் நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தும். இன்னும் வெள்ளைக்காரன் இட்ட புகையிரத பாதையினை விஸ்தரிக்க முடியாதென்றோ, அவர்களது பாலங்களுக்கு மேலதிகமாக பாலம் அமைக்க முடியாதென்றோ நினைத்தால் இலங்கை சமூகம் வாழ்வதற்கு கஸ்ட்டமாக அமைந்து விடும்.

இது இவ்வாரிருக்க அன்மைக்காலமாக மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைவஸ்த்துப்பாவணை, சிறுவர் துஷ்பிரயோகம், கொள்ளைச்சம்பவங்கள், குறித்து போதிய கவனம் செழுத்தாத நிலையில் அல்லது பொலிசார் தமது கடமையை சரிவர செய்கின்றனரா என்ற கேள்விகளுக்கு மத்தியில் இது மட்டும் ஒரு பிரச்சிணையாக கானப்படுவது வாதங்களுக்குட்பட்டதே. சிவில் குழு தொடர்பான ஒரு கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்த மக்கள் பிரதிநிதிகளுக்கான தனியான இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் பின்வரிசையில் அமர வேண்டிய சூழ்நிலையில் எவ்வாறு பொலிஸ் பொதுமக்கள் நல்லுறவை வழுப்படுத்துவது. கடந்த காலங்களில் இத்தகைய புறக்கனிப்புக்கள் இடம்பெற்றதாக இல்லை.

மோட்டார் சைக்கிளில் இரண்டு பக்கம் கால்களை வைத்து செல்வதில் கர்ப்பிணிகள், நோயாளர்கள் உள்ளிட்ட பென்கள் படும் சிரமங்களை கருத்தில் கொண்டு மாவட்ட அரச அதிபர் சிரேஷ்ட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த போது அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டிருந்தார். அவரது நிதானமான அநுகுமுறையினை குழப்புவதாக இன்றைய நிகழ்வுகள் கீழ் நிலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றதோ என என்னத்தோன்றுகின்றது. மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்கள் இராணுவத்தினராலேயே கண்டு பிடித்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்தோடு எதற்காக குற்றம் எழுதப்படுகின்றது என்பதனைத் தெரிந்து கொள்ளும் உரிமைகூட மறுக்கப்படுவதனை பொலிசாரின் தனிச்சிங்கள எழுத்து மூல நடவடிக்கைகள் காட்டுகின்றது. மொழிக்கொள்கை பேனப்படுவதற்காக அரசு நிறைய பணம் செலவு செய்து பொலிசாருக்கு தமிழ் கற்பிக்கின்ற போது, அதனை புகைப்படம் எடுத்து பத்திரிகை செய்தியாக மாத்திரம் விட்டுவிடாமல் நடைமுறையில் செயற்படுத்துவது பொலிஸ் திணைக்களத்தினதும் இத்தகைய அதிகாரிகளதும் கடமையாகும்.

எனவே மாவட்டத்தில் நடைமுறையில் இல்லாத ஏனைய பிரதேசங்களில் மோட்டார் போக்குவரத்து பொலிசாரினால் குற்றம் கானப்படாத விடயம் ஏன் காத்தான்குடி மக்களுக்கு மட்டும் திணிக்கப்படுகின்றது என்ற கேள்வியும் எழுகின்றது. சிலபோது  தண்டப்பணங்களின் ஒரு பகுதி உள்ளூராட்சி சபைகளுக்கு வருவதனால் காத்தான்குடி நகர சபை தவிசாளர் உள்ளிட்ட உருப்பினர்கள் இவ்விடயத்தில் மக்களின் சுமைகளை கவனத்தில் கானாமல் இருக்கின்றனரா என்ற கேள்வியும் எழுகின்றது.

ஏனைய மாவட்டங்களின் பல பகுதிகளில் தலைக்கவசத்தைக்கூட கண்கானிப்பதற்கு பொலிசார் முற்படாத நிலையில் ஏன் காத்தான்குடியில் மாத்திரம் இந்நிலை என்பதனை பொதுமக்களாகிய நாங்கள் கேள்விக்குற்படுத்த வேண்டியுள்ளதுடன் இவ்விடயத்தில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ்மா அதிபர் கவனம் கொள்ள வேண்டும் என்பதுடன், பாதுகாப்பு படைகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தாத பொதுமக்கள் சிநேக பூர்வ பொலிஸ் படையினை ஏற்படுத்த இராணுவத்தினரிடம் இருந்து முன்மாதிரிகளை பெற்று கொள்வதும் பயனுள்ளதாக அமையுமென நினைக்கின்றேன்.

Published by

Leave a comment