பொலிஸ் ஊரடங்கில் கிராண்ட்பாஸ்…(விரிவான செய்தி)

mosqueகொழும்பு: கொழும்பு கிரான்பாஸ் பிரதேசத்தில் உள்ள முஸ்லீம் பள்ளி ஒன்றின் மீது பௌத்த பிக்குமார் நடத்திய தாக்குதலில் பள்ளிக்கு தேசம் ஏற்பட்டதுடன் அருகில் இருந்த ஐந்து வீடுகளும் சேதமடைந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

ஐந்து பொதுமக்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஐந்து பொலிஸாரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது

இன்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் கிரான்பாஸ் பகுதியில் பதற்றம் நிலவுவதுடன் இராணுவத்தினா் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனா்.

கிரான்பாஸ் பிரதேசம் எங்கும் இராணுவம் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் ஆமா் வீதி கொட்டாஞ்சேனை களனி பாலம் ஆகிய இடங்களிலும் மேலதிக இராணுவத்தினா் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதேவேளை இந்த தாக்குதலுக்கும் தமக்கும் தொடா்பு இல்லை என பொதுப்பல சேன மறுத்துள்ளது. ஆனால் தாக்குதல் நடத்திய பௌத்த பிக்குமார் பொதுபல சேனவை சோ்ந்தவா்கள் என்று பிரதேச வாசிகள் கூறியதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிந்திக்கிடைத்த தகவலின் படி இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பொது மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 12 போ் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் இந்த தகவலை கிரான்பாஸ் பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் மூன்று போ் உயிர் இழந்துள்ளதாக பொலிஸ் தலைமைய தகவல்கள் கூறுகின்றன.

 

கொழும்பு கிராண்ட்பாஸ், ஸ்வர்ண ஜயந்தி மாவத்தை பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் – பிரதேசத்தில் பதட்டம் 

முஸ்லிம் இளைஞர்கள் அணிதிரள்வு – கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு

கொழும்பு கிராண்ட்பாஸ், ஸ்வர்ண ஜயந்தி மாவத்தையிலுள்ள பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பள்ளிவாசல் முற்றாக சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை 6.30 மஹிரிப் தொழுகையின் பின்னர் அங்கு வந்த குழுவினர் பள்ளிவாசலைத் தாக்கி முற்றாக சேதப்படுத்தியதுடன், அருகில் இருந்த சில வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் சில வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் வீட்டில் இருந்த வயோதிபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனால் பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இன்னும் சில இடங்களிலும் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்தில் இருந்த ஒருவர் தெரிவித்தபோதிலும் இந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது.

எனினும், முஸ்லிம் இளைஞர்கள் தற்போது அணிதிரன்டுவருவதாகவும், இதனைத் தடுப்பதற்கு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கிராண்ட்பாஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரானபாஸ் பிரதேசத்தில் இன்று இரவு முதல் நாளை காலை 7 மணி மணி வரை பொலிஸ் ஊரடங்கு –

தலைநகர் கொழும்பின் அண்மித்த பகுதியான கிரான்பாஸ் பிரதேசத்தில் இன்று இரவு முதல் நாளை காலை 7 மணி மணி வரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு இன்னமும் ஊடகவியலாளா் செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. jpc

Published by

One response to “பொலிஸ் ஊரடங்கில் கிராண்ட்பாஸ்…(விரிவான செய்தி)”

  1. munabu nubardeen Avatar
    munabu nubardeen

    எது எப்படி இருந்தாலும் புதன்கிழமை தலைப்பிறை என்பது சூரியன் மறைந்தன் பின்னால் சந்திரன் 14 நிமிடங்கள் வாணில் இருக்கும் எனும் உங்கள் கூற்றிலிருந்தே உறுதியாகிவிட்டது அப்படி என்றால் ஏன் அந்த பிறையை வைத்து நாம் முடிவு செய்யக் கூடாது.
    அனுராதபுர அட்டபொக்குன தைக்கா முதல் கொழுப்பு கிரான்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் வரைக்கும் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக அவற்றின் பாதுகாப்புக்காக பாதுகாப்புப் படையினர்கள் அனுப்பப் படுகின்றனர் அதன் பிறகே காடையர்கள் வருகின்றார்கள் பாதுகாப்புப் படையினர்களின் முன்னிலையில் அவர்களின் ஆசீர்வாதத்துடனேயே பள்ளி வாயற்கள் தாக்கப்படுகின்றன இதன் மர்மன் என்ன என்று உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா?
    தொடர்ந்தும் தொய்வின்றி மஙிந்தாவின் கையைப்பலப்படுத்துங்கள் அப்போதுதான் நமது பள்ளிவாயற்கள் விரைவில் இல்லாதொழிக்கப்படும் பள்ளிவாயற்கள் இல்லாதொழிக்கப்பட்டால் இலேசிதானே தொழத் தேவை இல்லையே…….

Leave a comment