காத்தான்குடி: காத்தான்குடிப் பிரதேசத்தில் 2013ம் ஆண்டு இம்முறை நோன்புப் பெருநாள் பஸாரில் காத்தான்குடி நகர சபையினால் ஆரம்பிக்கப்பட்ட நடு ஆற்றில் மிதக்கும் உணவகம் அல்லாஹ்வின் உதவியால் வெற்றிப்பாதையில் நடைபோடுகிறது.
குறித்த உணவகத்திற்கு சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் இயந்திரப் படகின் முலம் சென்று உல்லாசமாக தமது பெருநாள் தினங்களை கழித்து வருவதுடன் உடனைக்கு உடன் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை சுடச்சுட சாப்பிட்டும் வருகின்றனர்.
இதேவேளை குறித்த படகிற்கு குடும்பம் சகிதம் செல்லக்கூடிய வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷியாட் தெரிவித்தார்.
ஒரு படகில் சுமார் 08பேர் குடும்ப உறுப்பினர்களுடன் சென்று தமது பொழுதுகளை கழிக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த உணவகம் பெருநாள் தினங்களில் மாத்திரமல்லாது தொடர்ந்தும் இயங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உணவகம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வழகாட்டலில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பரின் முயற்சியினால் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![20130810_195719[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/20130810_1957191.jpg?w=150&h=112)
![20130810_195719[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/20130810_1957191.jpg?w=780&h=585)
![20130810_203714[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/20130810_2037141.jpg?w=780&h=585)
Leave a comment