ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்த 10 மணித்தியாலத்துக்குள் மற்றுமொரு பள்ளி வாயல் தாக்குதல்

mosque-AK 42

கொழும்பு: இன்று கொழும்பு, கிராண்ட்பாஸ் ஜூம்ஆ பள்ளிவாயல் பேரினவாதிகளால் தாக்கப்பட்டிருக்கின்றது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வேடிக்கை பார்த்து நின்றமை மக்களை ஆத்தரமூட்டியதாக பள்ளிவாயல் நிர்வாகிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

முஸ்லிம்கள் பாதுகாப்பு விடயத்தில் தனக்கு, ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சற்று முன்னர் தெரிவித்திருந்த வேளையில் இத்தாக்குதல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும், மக்கள் கலைந்து சென்றிருப்பதாகவும் தெரியவருகிறது.

Published by

Leave a comment