காத்தான்குடி: காத்தான்குடி ஆற்றங்கரை குபாப் பகுதியில் இடம்பெற்று வரும் நோன்புப் பெருநாள் பஸாரின் இறுதி நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கு பெருநாள் பஸார் ஒதுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் பெருநாள் பஸாரில் பெண்கள் முழுமையாக கலந்து கொள்ள முடியும் எனவும் நடு ஆற்றில் மிதக்கும் உணவகத்திற்கும் பெண்கள் செல்லலாம் எனவும் இன்றைய தினம் பெண்களுக்கென பஸார் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய பெருநாள் பஸாரில் 12வயதுக்கு குறைந்த ஆண் பிள்ளைகளும் தமது தாய்மார்களுடன் சமூகமளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.


Leave a comment