நடு ஆற்றில் மிதக்கும் உணவகம் உத்தியோகபூர்வமாக காத்தான்குடியில் திறந்து வைப்பு

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: கிண்ணியாவிலிருந்து காத்தான்குடிப் பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்ட படகுப்பாதை திருத்தி அமைக்கப்பட்டு மிதக்கும் உணவகமாக இயங்கும் குறித்த உணவகத்தை இன்று வெள்ளிக்கிழமை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் காத்தான்குடி ஆற்றங்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட முதல் பயணத்திலும் கலந்து கொண்டார்.

அங்கு உல்லாசமாக கழிப்பதற்கென ‘முற்றிலும் வித்தியாசம் முடிவில் இன்பம்’ எனும் தொனிப் பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த உணவகத்தில் கோழி கிறிப்ஸி மற்றும் சிப்ஸ், மாட்டிறைச்சி சிப்ஸ் , ஸ்டார் குப்ஸ், மலாலா கூல் கிறீம் உள்ளிட்ட வித்தியாசமான உணவுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முதலாவது கொடுக்கல் வாங்கலையும் ஆரம்பித்து வைத்தார்.

குறித்த உணவகம் பிற்பகல் 04.00 மணியிலிருந்து இரவு 12.00மணி வரை நடு ஆற்றில் இயங்கவுள்ளதாகவும் பூரன பாதுகாப்புக் கடமையில் கடற்படையினர் செயற்பட்டு வருவதாகவும் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

இந்த உணவகம் முதன்முறையாக மட்டு மாவட்டத்தில் காத்தான்குடிப் பிரதேசத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment