புத்தளம் திறந்த மைதான பெருநாள் தொழுகை

DSCF0538இர்ஷாத் றஹ்மத்துல்லா

புத்தளம்: இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் இன்று தமது நோன்பு பெருநாளை மிக மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்.கடந்த ஒரு மாதகாலமாக நோன்பு நோற்று தமது மதக்கடமையினை நிறைவு செய்த நிலையில் இந்த பெருநாளை கொண்டாடுகின்றனர்.

இதனையொட்டி இன்று காலை புத்தளம் மொஹிதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்த திறந்த மைதான பெருநாள் தொழுகை புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரி மைதானத்தில் இடம் பெற்றது.

புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லுாரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி) தொழுகை மற்றும் கொதுபா பிரசங்கம் என்பவைகளை நிகழ்த்தினார்.

அதனையடுத்து ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்து மற்றும் முஸாபஹா செய்து கொண்டனர்

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment