‘தலை பிறை இப்படி அனுகினால் என்ன?’ – ஜுனைட் நளீமி

junaid naleemi– பழுளுல்லாஹ் பர்ஹான்

உலக இஸ்லாமிய உம்மத்தில் இன்று வரை தீர்க்கமான தீர்வுக்கு வரமுடியாத விடயங்களில் தலைப்பிறை தொடர்பான அம்சமும் ஒன்றாக கானப்படுவதனை இது பற்றி வாசிக்கும் போது கானக்கூடியதாகவுள்ளது. இம்முறை இலங்கையில் இடம்பெற்ற பிறை தொடர்பான குழப்ப நிலை ஜம்மியதுல் உலமாவை குறி வைத்தவர்களின் வாய்க்கு அவல் கிடைத்ததானதாக அமைந்து விட்டது.

அன்மையில் இலங்கை முஸ்லிம்களின் பலம் பலவீனம் பற்றி நோக்கும் போது விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாமை, மட்டரகமான விமர்சனம் என்பன முக்கிய தாக்கம் செலுத்துகின்றன. மஹர் தொகை நிர்னயம் தொடர்பில் வயோதிப மாது உமர் (ரழி) மீது மண்கட்டியை வீசி அடித்து எச்சரித்ததும் ‘இந்த பென் இல்லாவிட்டால் உமர் அழிந்தேவிட்டிருப்பார்’ என்ற அழகிய இஸ்லாமிய கருத்துப்பரிமாரலும் எம் சமூகத்தை விட்டும் தூரமானதாக நினைக்கின்றேன். ஆளுக்கொரு சிந்தனை முகாமிலிருந்து பணத்துக்காய் எழுதுபவர்களும், தனக்கு கடுகளவு அறிவில்லாத விடயங்களில் கருத்து முன்வைப்பவர்களது கரங்களுக்கும் நாவுகளுக்கும் மத்தியில் இலங்கை முஸ்லிம் சமூகம் சிக்கி கிடப்பதாக உணர முடிகின்றது.

இனி விடயத்துக்கு வருவோம். குறித்த நோன்பு பெருநாளுக்கான தலைப்பிறை நிர்னயம் தொடர்பில் ஜம்மியதுல் உலமாவை முழுக்க குழி தோண்டி புதைத்து விடும் முயற்சி ஆரோக்கியமானதாக கருத முடியாது. கடந்த காலங்களில் முஸ்லிம்களது சமய கலாசார பாரம்பரிய விடயங்களில் ஜம்மியதுல் உலமாவினதும் அதன் அங்கத்தவர்களதும் அர்ப்பணிப்பும், வழிநடாத்துதலகளும் பாறிய பங்களிப்பினை செய்துள்ளன என்பதனை எவரும் மறுக்கமுடியாது.

வாடகைக்கட்டிடங்களில், தமது முழு நேர பணியாளர்களை சம்பளத்துக்கு அமர்த்த முடியாமல், ஜம்மியாவின் நிகழ்ச்சித்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியாமல் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வீடு முதல் வீதிவரை வேரோடிய பிரச்சிணைகளுக்கு தீர்வுகான முழு முயற்சியாக செயற்பட்டமை மருக்க முடியாத உண்மைகள். இத்தகைய சமூக அங்கீகாரம் கொண்ட ஒரு நிருவனத்தினை மூடுவிழாவை நோக்கி நகர்த்தி எல்லோரும் தலைவர்களாக சமூகத்தை கூறு போட்டு வழிநடாத்த முனைவது முஸ்லிம் சிறுபான்மை கொண்ட நாட்டிற்கு ஆரோக்கியமானதாக அமையாது. முஸ்லிம் சிறுபான்மையாக வாழும் பல நாடுகளில் இத்தகைய அமைப்பொன்றை உருவாக்க முடியாத நிலையில் எமக்கு இத்தகைய அமைப்பு ஒருவரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் ஒட்டு மொத்த விவகாரங்களிலும் பொதுமையான தீர்வினை எட்ட இத்தகைய பொறிமுறை அவசியானது என்பது யதார்த்தமான அம்சமாக அமைகின்றது. இங்கு கானப்படும் மாறுபட்ட கருத்துக்களை கொன்ட இஸ்லாமிய அமைப்புக்களைப்பொருத்தவரையில் அவற்றின் தனித்தனியான தீர்மானங்கள் முழு இலங்கை வாழ் முஸ்லிம்களும் ஏற்று நடக்கமுடியும் என்ற கருத்தும் நடைமுறைக்கு சாத்தியமற்றதாகவே அமையும் என்பதனை நாம் ஏற்றுக்கொன்டுதான் ஆகவேண்டும்.

எனவே பல்வேறு அமைப்புக்களும் அங்கம் வகிக்கும் பொதுவான அமைப்பாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அமைவதனால் பெரும்பாலான முடிவுகள் அனைவரதும் உடன்பாட்டோடு எட்டப்படுவதனை சாதகமாக கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடொன்றில் இத்தகைய அமைப்பொன்றினூடாகவே இஜ்மாவான முடிவுகளை எட்டவேண்டும் என்றே அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் கருத்துக்கொள்கின்றனர். உஸ்மான் (ரழி) கொள்ளப்பட்ட சூழ்நிலையில் இஸ்லமிய கிலாபத் ஆட்டம் கண்டுகொன்டிருந்த போது கொசுவின் இறத்தம் ஹலாலா? ஹராமா? என்றும், உஸ்மானிய கிலாபத் மீது படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டு எகிப்து ஆக்கிரமிப்புக்குள் ஆலாகி கொண்டிருந்த போது காக்கை இறைச்சி உண்ணலாமா கூடாதா என்று வாக்குவாதப்பட்டுக்கொண்டிருந்த சமூகத்தின் வாரிசுகள் இங்கும் கானப்படுவது நியதியானதே. இந்நிலைகளில் இஸ்லாமிய சமூகத்தை வழிநடாத்தும் கூட்டு தலைமத்துவ அமைப்பு தேவையான ஒன்றே.

இத்தகைய பிண்ணனியில்தான் கடந்த நோன்பு பெருநாள் பிறை தொடர்பாக ஜம்மியதுல் உலமாவை அநுக வேண்டியுள்ளது. குறித்த பிறை தொடர்பான சர்ச்சையில் யார் சரி யார் பிழை என்பதற்கும் விடாப்பிடிகளுக்கும் அப்பால் இத்தகைய தொரு நிலை மீண்டும் ஏற்படாமல் செயற்படுவதற்கான சில அம்சங்களை இங்கு நோக்குவது பொருத்தம் என நினைக்கின்றேன்.

ஜம்மியதுல் உலமாவினை பலப்படுத்துதல்

இன்று முஸ்லிம் சமூகத்திடம் உள்ள குறைபாடுகளில் ஒன்றுதான் வெள்ளம் வந்தபின்; அனையினைத்தேடுவது. பிறை விடயம் உள்ளிட்ட பல விடயங்களில் விமர்சனம் முன்வைக்கும் உலமாக்கள்; பலர் கூட ஜம்மியதுல் உலமாவில் அங்கம் வகிக்காது முடிவுகள் எட்டபட்டபின்னர் விமர்சனம் செய்வதனை கான்கின்றோம். பிறைக்குழு 2006ம் ஆண்டு கூடி ஐந்து முக்கிய தீர்மானங்களை பிறை தொடர்பில் எட்டிய போது யாரும் அது தொடர்பான மேலதிக ஆய்வுகளுக்கு செல்லவில்லை என்பது யதார்த்தமானதே. என்றாலும் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களைச்சேர்ந்த உலமாக்களுக்கும் ஜம்மியதுல் உலமாவின் கதவு திறந்தே இருக்கின்றது என்பது தெளிவான விடயம்.

எனவே கருத்து வெறுபாடுகளை களந்தாலோசித்து இறுதி தீர்மானம் எட்டுகின்ற உள்ளக அரங்கமாக ஜம்மியதுல் உலமாவை பயன்படுத்த முடியும். எனவே மாற்றுக்கருத்துடையவர்கள்; இவ்வமைப்பில் அங்கத்துவம் பெருவது ஓறளவு எதிர்காலத்தில் பிரச்சிணைகளை உறிய முறையில் அநுகுவதற்கு வாய்ப்பாக அமையும். இவ்வமைப்பு குறிப்பிட்ட ஒரு கூட்டத்துக்கு மாத்திரமானது என்ற மனநிலையிலிருந்து மாறவும் மாற்றவும் வேண்டிய கடப்பாடு உலமாக்களுக்கு உண்டு.

வளங்களை ஏற்படுத்தல்

ஜம்மியதுல் உலமா அன்று தொட்டு எதிர் நோக்கி வரும் நிதி நிலவரங்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய தேவையும் உள்ளது. உண்மையில் அல்லாஹ்வின் நற்கூலியை எதிர்பார்த்து செய்கின்ற ஒன்றாகவே இது அமைந்துள்ளது. பிறை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக ஜம்மியதுல் உலமா அவசரமாக தீர்மானத்தை  எடுத்திருக்க கூடாது என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அழிப்பதாகவே அதன் தலைவர் அவர்கள் ‘இது ஒரு திணைக்களம் போன்ற வசதிகள் கொண்டதல்ல. அத்தோடு இந்த விடயத்திலேயே தொடர்ந்தும் இறுக்க முடியாது. இருந்த போதும் இரண்டு மணித்தியாளங்கள் பிந்தியே நாம் அறிவித்தல் விடுத்தோம் என கூறுவதிலிருந்து விளங்க முடிகின்றது. அவர்கள் பக்கதில் யதார்த்தமானதாகவும் இருக்க முடியும். எனவே எதிர்காலத்தில் பிறைக்குழு உள்ளிட்ட முக்கிய பொருப்பு வாய்ந்த ஜம்மியதுல் உலமா உருப்பினர்களுக்கும் கொடுப்பனவுடன் கூடிய பொருப்புக்களை வழங்குவது முழு நேரம் இதில அவர்கள் நேரத்தை செலவிடுவதற்கு வாய்ப்பாக அமையும். கடந்த காலங்களில் சஹர் முடிந்த பின்னரும் கூடியிருந்து ஆராய்ந்து முடிவுகளை எட்டிய உலமா சபை தலைமைகளும் இந்த பிரச்சிணைகளை எதிர்கொண்டாலும் சமூகத்திற்கு எவ்வளவு தியாகங்களை செய்துள்ளனர் என்பது புழப்படுகின்றது.

இத்தகைய வளங்களும் வசதிகளும்  குறை காரணமாகத்தான் முதல் கிடைத்த ஐந்து நபர்களுடனும் பேசிய பின்னர் ஏற்பட்ட தெளிவின்மையைத்தொடர்ந்து அவசரமாக முடிவினை எட்ட வேண்டி ஏற்பட்டுள்ளது என்பதனை புறிய முடிகின்றது. ஏனைய சாட்சிகளை தீர விசாரித்து முடிவெடுப்பதற்கான நேர ஒதுக்கீடு பிரச்சிணை இதனடியாகவே ஏற்பட்டுள்ளது.

செயலூக்கம் கொண்ட பிறைக்குழுவினை பிராந்திய ரீதியில் அமைத்தல்

ஒவ்வொரு ஜம்மியதுல் உலமா கிளைகளிலும் பிறை பார்ப்பது கடமை என்ற விடயத்தை அவ்வப்போது ஞாபகமூட்டி, பிறைகுழு உருப்பினர்கள் பிறை பார்ப்பதை உறுதிப்படுத்தல் அவசியமாகும். திருகோணமலை பிராந்திய விடயத்தில் பிறைக்குழு உருப்பினர்கள் தமது கடமையிலிருந்து சரிவர புரியவில்லை என்ற தகவலும் கவலையளிப்பதாக அமைகின்றது. பிறை பார்த்தல் பர்ளு கிபாயாவாகும் என்ற அம்சம் சில போது பொடுபோக்காக மாறியதன் விளைவாகவே இது அமைந்திருக்கும் என நினைக்கின்றேன்.

அத்தோடு பிறை பார்க்க வேண்டும் என்ற நாட்களில் ஜம்மியாவின் கிளைப்பிரதேச பள்ளிவாசல்களில் மக்களுக்கு அது தொடர்பில் பூரண விளக்கமும் தெளிவும் வழங்கப்படவேண்டும். பிறை எவ்வாறு, எந்த அமைப்பில், எந்த நேரத்தில் தோன்றும், எவ்வாறு கண்டதற்கான சாட்சியங்களை ஏற்படுத்திக்கொள்ளல் தொடர்பிலும் விளக்கம் அளிக்க வேண்டும்.

ஏனெனில் எல்லோரும் சாதரன நிலையில் கையில் கடிகாரத்துடனும், புகைப்பட கருவியுடனும் செல்வதற்கான வாய்ப்பில்லை. எனவே முன் ஆயத்த நடவடிக்கை பின்னர் பிறைக்குழுவினால் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க வாய்ப்பாக அமையும். அதே போல் பிராந்திய பிறைக்குழு மத்திய குழுவைப்போன்றே அன்றைய இரவின் பெரும்பகுதியினை ஒன்று கூடி தகவல்களை பெருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.

பிறை பார்ப்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஐந்து முடிவுகளையும் காலத்துக்கு காலம் அல்லது குறைந்தது ஒருவருடத்திற் கொருமுறை மீள்பரிசீலனை மேற்கொள்ளல்

குறித்த பிறை  பிணக்கின்போது முன்வைக்கப்பட்ட முதன்மையான ஜம்மியது உலமாவின் வாதம் இன்று பிறை இலங்கைக்கு வெற்றுக்கண்களால் தோற்றாது என்ற வானியல் நிபுனர்களின் கருத்தை முதன்மைப்படுத்தியதாக அமைந்திருந்தது இது தொடர்பில் நீண்ட ஆய்வு இன்னும் தேவைப்பாடாக உள்ளது. தொழிநுட்ப ரீதியான அல்லது வானியல் வல்லுனர்களின் விஞ்ஞான ரீதியன முடிவுகளை முதன்மைப்படுத்தல் என்பதில் இன்று பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றது. ச

வூதியில் கூட அதன் சட்டசபை பிறைக்குழுவினை அமைத்து தொழிநுற்ப ரீதியாக பிறையை அவதானித்தல் என்ற முடிவினை எடுத்த போதும் சவுதி அரேபியாவின் முக்கிய சட்டவறிஞர் சேஹ் உதைமின் போன்றவர்களும் சவுதிய ஊடகங்களும் அக்குழுவிற்கு ஒத்துழைப்பி வழங்காமல் கருத்து வேறுபாடு கொண்டுள்ளமையை கலாநிதி சல்மான் சேஹ் குறிப்பிடுகின்றார். எ

னவே வட அமெரிக்கா போன்ற தொழிநுட்பம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் வெற்றுக்கண்களில் பிறை பார்ப்பதையே முதன்மையாக கருதுவதினை அவர் குறித்துக்காட்டுகின்றார். எனவே இங்கு வானியல் வல்லுனர்களை ஒதுக்கிவிட நான் கூறவில்லை. ஆனால் கருத்து வேறுபாடுகள் தொழிநுட்பம் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கானப்படுகின்றது என்பதனை குறிப்பிட வருகின்றேன்.

அத்தோடு வானியல் நிபுனர்களது அளவீடுகள் கிரீன்வீச் நேரத்தை மையப்படுத்தி அமைவதனால் சில போது தவறுகள் இடம்பெற முடியும் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. மக்கா நேரத்தை அடிப்படையாக கொண்டே உம்முல் குரா கால அட்டவணைக்கமையவே கணிப்பீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற பிரிதொரு சாராரும், எந்த நேரத்தை வைத்தும் குறிப்பிட்டு இஸ்லாம் சொல்லவில்லை என்ற ஒரு வாதமும் என பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கிடையில் வானவியல் கணிப்பீடு சிக்கியுள்ளது என்பதனையும் விளங்கிக்கொள்ள வேண்டியும் உள்ளது.

கின்னியாவில் கண்ட பிறை தொடர்பாக ஜம்மியதுல் உலமா மத்திய சபை மருதளிக்க காரணங்களில் ஒன்றாக இவ்வம்சம் பேசப்பட்டது. அதாவது

‘கிண்ணியாவில் சில நல்லவர்கள் பிறை கண்டதாக சாட்சி கூறினார்கள். அவர்கள் பொய் சொல்லவில்லை. அவர்கள் பிறையை கண்டும் இருக்கலாம். ஆனால், அவர்கள் கண்ட பிறையின் அளவு குறித்து நுனுக்கமாக ஆராய தேவை இல்லாவிட்டாலும் சில காரணங்களுக்காக கேட்க வேண்டியுள்ளது. அவ்வாறு கேட்டதில் அவர்கள் கண்டதாக குறிப்பிடும் பிறையின் அளவை ஏற்க முடியாதுள்ளது’/

 ‘ஆனால் இவர்கள் பொய் சொல்வதாக நாம் கூறவில்லை. இவர்கள் வேண்டுமானால் நாளை நோன்பை விடலாம். ஆனால் மக்களுடன் சேர்ந்து பெருநாளை கொண்டாட வேண்டும். பிறை குறித்த அறிவித்தலை அரச அதிகாரமிக்க ஒரு அமைப்பு தான் அறிவிக்க வேண்டும்.’

இந்த அறிவிப்பில் பிறை இவ்வாறு இந்த அளவு என வரையறைகல் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கணிப்பீடு சில போது ஹதீஸுக்கு மாற்றமானதாக அமைந்துள்ளதோ என என்னத்தோன்றுகின்றது. 

அபீ பக்தாரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நாங்கள் ஈராக்கின் ஐ டித் பிரதேசத்தில் இருந்த போது ரமழானுக்கான பிறையை கண்டோம் (வழமைக்கு மாற்றமாக சந்திரன் சிறியதாக ஒரு குறையுடையதாக கானப்பட்டது). இது தொடர்பில் வினவ நாம் ஒருவரை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் அனுப்பி வைத்தோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி)அவர்கள் நபி (ஸல்) குறிப்பிட்டதாக குறிப்பிட்டார்கள் : நிச்சயமாக அல்லஹ் பார்வையில் வித்தியாசங்களை வைத்துள்ளான்’ என்றாலும் புதிய பிறை உங்களுக்கு தென்படவில்லையாயின் அதனை (30 ஆக) முழுமைப்படுத்துங்கள்’. ஆதாரம் சஹீஹ் முஸ்லிம்.

எனவே பார்வைகளின் வித்தியாசங்களையும் ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற வாதங்களும் எழத்தான் செய்கின்றது. அல்லாஹ் அறிந்தவன். இவ்வாறு பிறைக்குழுவின் 2006 தீர்மானக்கள் மீள் பரிசீளனைக்கு உற்படுத்துவது பிணக்குகளை தீர்க்க வாய்ப்பாக அமையும்.

ஜம்மியதுல் உலமாவினால் முனவைக்கப்பட்டுள்ள நோன்பை விட்டவர்கள் தொடர்பான பத்வாவை மீள் பரிசீலனைக்குற்படுத்தல்

ஜம்மியதுல் உலமாவின் கன்னியத்திற்குறிய தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போன்று இது ஒரு இஜ்திஹாதுடன் தொடர்பான விடயமுமாகும். இறு தரப்பும் தமது நியாயப்பாடுகளை முன்வைப்பதனை கானமுடிகின்றது. இமாம் இப்னு தைமியாவின் நூலிலிருந்து வைக்கப்பட்ட பதிலானது நோன்பை விட்டவர்களிடம்  மாத்திரமல்ல கின்னியாவில் உள்ள அனைத்து உலமாக்கள் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. தமது தீர்ப்பினை வாபஸ் பெருவதன் மூலம் மக்களிடம் இஸ்லாத்தை சொல்வதிலும் ஏற்றுக்கொள்வதிலும் சங்கடங்கள் ஒருபுரம் இருக்க அவர்களும் தமது வழுவனதாக கருதப்படும் ஆதரங்களை முன்வைக்கின்றனர். ஜம்மியாவின் தலைவர் ‘சந்தேகமான நாட்களில் பிறை தென்பட்டதாக ஒருவர் குறிப்பிட்டாள் அவர் தான் நோன்பை விட்டு பெருநாளை கொண்டாடமுடியும். மாறாக அடுத்தவரை அதன்பால் தூண்ட முடியாது என்ற இப்னு தைமியாவின் கருத்தை முன்வைத்து கின்னியா ஜம்மியதுல் உலமாவின் கருத்தை மறுதளிப்பதை கானமுடிந்தது. சமூக ஒற்றுமையே முதன்மையாக கூறப்பட்டது. ஆனால் சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டது என்றும், சந்தேகமான நாளில் பிறை பார்க்கும்படி மக்களுக்கு அறிவுருத்தல் செய்திருக்க கூடாதென்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு பிறையை உறுதிப்படுத்துவதில் கண்டவர் அதனை உறுதிப்படுத்திய சாட்சியை முன்வைக்கப்பட வேண்டும் அவ்வாறு முன்வைக்கப்படாது கருத்து வேறு பாடு கொண்டால் அதனை பொதுவாக அறிவிக்க முடியாது என்ற சட்டத்தினை முன்வைப்பதனை சுட்டிக்காட்டியதான பத்வாவாக ஒரு தரப்பும், சேஹ் கர்ழாவி குறிப்பிடுவது போன்று உறுதிப்படுத்துபவர் நம்பிக்கையாளராக இருந்தாள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை மற்ற சாராரும் முன்வைப்பதனை கானமுடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஒற்றுமைக்காக தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்று ஒரு தரப்பும், அல்லாஹ் தடுத்தவற்றில் யாருக்கும் ஆகுமாக்கும் உறிமையில்லை என்ற குரான் வசனத்தை ஆதாரமாக இன்னொரு சாராரும் தூக்கிப்பிடித்துக்கொண்டு நிற்பதனை கானமுடிமின்றது. இவற்றுக்கெல்லாம் அப்பால் கின்னியாவிற்கு வெளியில் உள்ளவர்கள் எதனை அடிப்படையாக வைத்து தலைப்பிறையை தீர்மானித்து நோன்பு நோற்றார்களோ அதே அடிப்படையில்தான் நோன்பை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் முன்வைப்பதனையும் கானமுடிகின்றது.

எனவே கருத்து வேறுபாடுகள் இன்றைய சூழலில் பிரிவினையை ஏற்படுத்தி சமூகத்தை சின்னாபினமாக்காமல் சம்பந்தப்பட்ட இருதரப்பும் ஒன்று கூடி சுமூகமான தீர்வினை எட்டுவது ஆரோக்கியமாகவும் குளம்பிப்போயுள்ளவர்களுக்கு ஆருதலாகவும் அமையும்.

Published by

Leave a comment