கட்டாயம் இவ் ஒலிப்பதிவைக் கேட்கவும்
காத்தான்குடி: நேற்று ஷவ்வால் மாதத்தின் முதலாவது தினமான புனித நோன்புப் பெருநாள் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.இது இவ்வாறிருக்க குறித்த விடயம் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அதை பிழை கண்டு நேற்று இலங்கை தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஆக்ரோஷ உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.
இதனை செவியுற்ற சில மக்களுக்கு பல்வேறு சந்தேகங்களும் ஐயங்களுக்கும் காணப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நேற்று இரவு எமது காத்தான்குடிப் பிரதேசத்தில் ஒரு துண்டுப் பிரசுரம் ஒன்று வெளியாகியிருந்தது.
அதில் இன்று(வியாழக்கிழமை) நோன்பை விட்டவர்கள் நோன்பைக் கழாச் செய்யுமாறும் இன்ஷா அல்லாஹ் நாளை வெள்ளிக்கிழமை திடலுக்குச் சென்று பெருநாள் தொழுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆகவே இது தொடர்பாக காத்தான்குடி05 மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயல் நிர்வாகம் குறித்த விடயம் தொடர்பில் நேற்று நோன்பை விட்டு பெருநாள் கொண்டாடியவர்களுக்கு பூரண தெளிவு வழங்கும் வண்ணம் புதன்கிழமை கிண்ணியாவில் பிறை கண்டது ஊர்ஜிதம்தான் அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என்பது தொடர்பிலும் ஏன் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா இந்தப் பிறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தொடர்பிலும் குத்பாவின் பின்னர் ஒரு விளக்க பயான் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். விளக்க பயான் நிகழ்வை மௌலவி அஸ்பர் ஹஸன் பலாஹி நிகழ்த்தினார்.
உரை:- மௌலவி அஸ்பர் ஹஸன் பலாஹி
ஒலிப்பதிவு:- பழுளுல்லாஹ் பர்ஹான்
Leave a comment