சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முதல்வர் இல்மி அஹமட்லெவ்வையின் பெருநாள் வாழ்துச் செய்தி

ILMI JPபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: கடந்த நோன்பு காலங்களைவிடவும் இம்முறை ரமழானில் காத்த நகர் முழுவதும் இறைமணம் வீசியது. மஸ்ஜிதுகள் பிரகாசித்தன அதிகமான மக்கள் பகல் எல்லாம் நோன்பிருந்து இரவு முழுவதும் இறைவழிபாடுகளில் ஈடுபட்டார்கள்.

விஷேடமாக பெண்கள் இரா வணக்கங்களில் அதிக ஆர்வம் காட்டினார்கள். தனவந்தர் சக்காத் வினியோகத்துக்கு அப்பால் சதக்காக்களையும் வாரி வழங்கினார்கள். இவைகள் முன்மாதிரியான முகப்புகளாகும். இவ்வாரெல்லாம் அழ்ழாஹ்வினது மகிழ்வைப் பெற்று உரிமையோடு பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நம் காத்தான்குடி ஈமானிய உறவுகளுக்கும் தாய்மண்ணின் நினைவோடு கடல் கடந்து வாழுகின்ற சகோதர சகோதரிகளுக்கும் வலிந்தும் வாழாது வறுமைச் சுமையோடு போராடுகின்ற நம்மூர் ஏழை மக்களுக்கும்இஅங்கவீனர்கள்இ அனாதைச் சிறுவர்கள் மற்றும் துயரத்தோடு துடிக்கின்ற இளம் விதவைகள் அனைவருக்கும் சமூக மறுமலர்சிக்காக உழைத்து வருகின்ற இயக்கம் (சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு) என்ற உரிமை வரம்புக்குள் நின்று எமது புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரித்துக் கொள்வதில் பெருமகிழ்சி அடைகின்றேன்.

இவற்றோடு yourkattankudy இணையம் எம்மைப்போன்று சமூக விடியலுக்காக பயணிக்கின்ற நிறுவனங்களினது செயற்பாடுகளை வெளிப்படைத் தன்மையோடு வெளியிட்டு உற்சாக உரமூட்டுகின்றது. இவற்றுக்கப்பால் பொது நிறுவனங்களினது தகவல்களை கழஞ்சியப்படுத்துகின்ற அரும் பணியையும் இது மேற்கொள்கிறது. எனது பார்வையயில் ஒரு மினி ‘தகவல் பெட்டகம்’.

இன்ஸா அழ்ழாஹ் எதிர்காலத்தில் செயற்பாட்டாளர்களின் அர்பணிப்பால் இவ்விணையம் பேசும் ஊடக பரினமிக்கும் பிராத்தனை கலந்த பாராட்டுக்கள். இவ்விணையக் குடும்பத்துக்கும் எமது ஈதுல்பித்ர் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை பகர்ந்து கொள்வதில் பரவசமடைகின்றேன். என சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முதல்வரும் சமூக சேவையாளருமான ஜனாப் இல்மி அஹமட்லெவ்வை தெரித்தார்,

அல்ஹம்துலில்லாஹ்.

Published by

Leave a comment