கில்லாடி பிக்குவுக்கு சிறை

bothuகொழும்பு: மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் அனுமதிபெற்ற சாரதி அனுபத்திரமின்றி வாகனத்தை செலுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளியாக இனங்கண்ட தேரருக்கு 13 ஆயிரத்து 500 ரூபா தண்டமும் ஒருவருடம் ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மஹவ பிரதான நீதவான் ருவினி ஜயவர்தனவே மேற்கண்டவாறு இன்று தண்டனை விதித்துள்ளார். தொம்பே விஹாராதிபதி இத்தோல பஞ்ஞானந்த தேரருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதவானினால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ‘அம்மாவா பெண், மனைவியா பெண், தங்கையா பெண், அக்காவா பெண்’; என்று உரத்த குரலில் பாடலை பாடியுள்ளார். அதனால் விரைந்து செயற்பட்ட நீதிமன்ற பொலிஸார் தேரரின் வாயை பொத்தி நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்து சென்றனர்.

மஹவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கடந்த 31 ஆம் திகதி பகல் 12.30 க்கு மஹவ தலதாகமவில் வைத்து கைது செய்யப்பட்டார். பொலிஸ் சமிஞ்சைக்கு கட்டுப்படாமல் வாகனத்தை செலுத்தி சென்றவேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

அவரை கைது செய்த போது அவர் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை கண்டறிக்கப்பட்டதுடன் அனுமதிபெற்ற சாரதி  அனுமதிப்பத்திரமல்லாமல் போலி பத்திரத்தை வைத்து வாகனத்தை  செலுத்தியதும் கண்டறியப்பட்டது.

மது, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஏனைய சில குற்றச்சாட்டுக்கள் காரணமாக இலங்கையில் அண்மைக்காலமாக இவ்வாறான பிக்குகள் கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது

Published by

Leave a comment