ஒட்டக தேசத்து பெருநாள்

eid – பிரகாசக்கவி

நான்கு சுவர்களுக்குள்
 நான்கு நண்பர்கள்

C* C* C* C*

எண்ணங்களும்
 ஏக்கங்களும்
C* C* C* C*

ஊர் வீதிகளிலும்
ஊரின் வண்ணங்களிலும்
ஊறுகாய் போல
உலா போகிறது !

C* C* C* C*

உம்மாவின் கை மணமும்
 ராதாவின் சேட்டைகளும்
 ராகம் பாட

C* C* C* C*
 

தம்பியின் குறும்பும்
 தங்கையின் அன்பும்
 தாகம் எடுக்க

C* C* C* C*
 

அவசர அவசரமாய்
 ஆக்கிய சோறும்
 அன்பில்லா கறியும்
 அள்ளி நிறைகிறது வயிறு–

 C* C* C* C*

ஸ்கைப் இல் முகம் பார்க்கும் இன்பத்திலும்
 முக நூலின் முகம் மறைக்கும்
 புகைப்படங்களோடும்
 முடிந்து போகிறது
 மூன்றாம் தேசத்து
 முதுகு சொரியும்
 தாய் தேசத்து தங்க மகன்களின் பெருநாள்

Published by

Leave a comment