காத்தான்குடி மஸ்ஜிதுல் குபாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை

20130808_061808[1]– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: நேற்று புதன்கிழமை கிண்ணியாப் பிரதேசத்தில் ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது ஊர்ஜிதப்படுத்தப்பட்டதையடுத்து இன்று வியாழக்கிழமை இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை நடாத்தப்பட்டது.

காத்தான்குடி மஸ்ஜிதுல் குபாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையில் பெருநாள் தொழுகையையும் குத்பாப் பேருரையும் மௌலவி நஷ்மல் (பலாஹி) நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் ஆண், பெண் கலப்பில்லாது ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் பெருந்திரளான ஆண் பெண்கள் உட்பட பலரும் கலந்து கொண்டதாக காத்தான்குடி மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் எம்.மன்சூர் தெரிவித்தார்.

 புனித நோன்புப் பெருநாள் தலைப்பிறை தொடர்பில் பிறை தென்பட்டது உறுதிப்படுத்தப்பட்டு அதை கிண்ணியா ஜம்மியதுல் உலமா சபை ஏற்றுக்கொண்டு அறிவித்தும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அதை ஏற்றுக்கொள்ளாது ரமளானை முப்பதாக பூர்த்தியாக்குமாறு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

One response to “காத்தான்குடி மஸ்ஜிதுல் குபாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை”

  1. மௌலவி நஷ்மல் தாருல் அதர் பிரச்சாரகராக சில காலம் செயற்பட்டு இப்போது குபாவில் ஆட்டயப் போட நினைக்கிறார். அதுவும் நிரந்தரமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

Leave a comment