காத்தான்குடி: எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி 5 ஆற்றங்கரை ஓரத்தில் அமையப்பெறும் சிறுவர் பெருநாள் பஸாரை முன்னிட்டு கிண்ணியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பாதை சேற்றில் புதைந்தது. 15,000 கிலோவுக்கும் அதிகமான எடையைக் கொண்ட, சேற்றில் புதைந்த பாதையை இழுத்தெடுப்பதற்கு குறித்த ஜே.சி.பி. வாகனம் பயன்படுத்தப்பட்டது.
எனினும், ஜே.சி.பி. வாகனத்தின் சக்திக்கு அப்பால் குறித்த பாதையின் நிறை இருந்ததால் சேற்றில் புதையுண்ட பாதையை எடுக்கும் போது ஜே.சி.பி. வாகனம் ஆற்றில் புதையுண்டது.
வேடிக்கையான இச்சம்பவத்தைக் கண்ட மக்கள் வாய்விட்டுச் சிரித்ததைக் காணமுடிந்தது. பின்னர், புதையுண்ட ஜே.சி.பி. வாகனத்தை வெளியில் எடுப்பதற்கு, அதைவிடவும் சக்தி கொண்டு பாரம் தூக்கும் மற்றுமொரு இயந்திரம் அழைத்துவரப்பட்டு, புதையுண்ட ஜே.சி.பி. வாகனம் அகற்றப்பட்டது.
குறித்த ஜே.சி.பி. வாகனம், வட்டிப்பண சர்ச்சைக்கு இதற்கு முன்னர் உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
![2013-08-05 15.28.54[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/2013-08-05-15-28-541.jpg?w=150&h=112)
![2013-08-05 15.28.54[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/2013-08-05-15-28-541.jpg?w=780&h=585)
Leave a comment