மட்டு பொலிஸாரின் வீதி அணிவகுப்பு மரியாதை

DSC_5356பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: ஆறுமாதங்களுக்கு ஒரு தடைவை நடைபெறும் மட்டக்களப்பு பொலிஸாரின் வீதி அணிவகுப்பு மரியாதை இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது. பேண்ட் வாத்தியத்துடன் ஆரம்பமான இப்பேரணி மட்டக்களப்பு டெலிகொம் சந்தியிலிருந்து திருமலை வீதியூடாக நகர மணிக்கூட்டு கோபுரசுற்று வட்டம்வரை வந்து பொலிஸ் நிலையத்தை சென்றடைந்தது.

இவ் அணிவகுப்பு மரியாதையில் போக்குவரத்து, மோட்டார் சைக்கிள், வாகனங்கள் மற்றும் பொலிஸ் நாய்கள் என்பன இடம்பெற்றன.

அணிவகுப்பு மரியாதையை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுறுத்த பண்டார ஹக்மன, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ண, மாவட்டத்தின் 12 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் கோட்டைமுனை பாலத்தில் வைத்து பார்வையிட்டனர்.

குறித்த அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது கிழக்கு மாகாண சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment