நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களது வாழ்வில் இறைவனின் அருள் கிடைக்க பிரார்த்திப்போம்- அமைச்சர் றிசாத் பதியுதீன்

rishad–  இர்ஷாத் றஹ்மத்துல்லா

கொழும்பு: அருள் மறை இறக்கப்பட்ட புனிதமான மாதத்தில் அதனது மகிமையினையும், மகோத்துவத்தையும், உன்னதமான பண்புகளையும் தம்மகத்தே உருவாக்கி இன்று ஈதுல் பித்ர் என்னும் நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களது வாழ்வில் இறைவனின் அருள் கிடைக்க பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தமது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நோன்பு பெருநாளையிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது –

இஸ்லாமிய மார்க்கமானது இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களும் நேர் வழியினை காட்டும் ஒன்றாகவே அருளப்பட்டுள்ளது. துரதிஷ்டம் இதனது யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியாதவர்கள் இஸ்லாமியர்கள் என்ற வட்டத்திலிருந்து விலகியுள்ளனர்.

கடந்த ஒரு மாதகாலமாக தமது உணர்வுகளை கட்டுப்படுத்திஇபடைத்த இறைவனுக்கு முழுமையாக சிரம்பணிந்து நோன்பெனும் கடமையினை நிறைவு செய்து இன்று பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் முஸ்லிம்கள் முன்னிலையில் பெரிய சவாலொன்றும் உள்ளது என்பதை இன்றைய தினத்தில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தமது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

சகல சமூகங்களுக்கும் மதிப்பளித்து நடக்க கற்றுத் தந்துள்ள இஸ்லாம் நோன்பின் மூலம் அந்த மனிதர்களை உருவாக்கும் அடித்தளத்தை இட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்  நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களும் வடக்கிலிருந்து பயங்கரவாதிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கும் இன்றைய தினத்தில் பிரார்த்திக்குமாறும் தமது பெருநாள் செய்தியில் கேட்டுள்ளார்.

Published by

Leave a comment