நோன்பு எமக்கு கற்றுத் தந்த பாடத்தை ஏனைய காலங்களிலும் தொடர்ந்து வாழ்வில் முன்னெடுக்க இன்றைய தினத்தில் உறுதி பூனுவோம்: ஹூனைஸ் பாருக்

hunais– இர்ஷாத் றஹ்மத்துல்லா

கொழும்பு: நோன்பு எமக்கு கற்றுத் தந்த பாடத்தை ஏனைய காலங்களிலும் தொடர்ந்து வாழ்வில் முன்னெடுக்க இன்றைய தினத்தினல் உறுதி பூனுவோம் என்று தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக், நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் தமது ஈத் முபாரக் பெருநாள் வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் வாழும் இஸ்லாமிர்கள் எமது தாய் நாட்டின் உருமைப்பாட்டுக்காக செய்த அர்ப்பணத்தை இன்றைய தினத்தில் நினைவு கூர்வது பொருத்தமானது.பசியினையும்,, தாகத்தினையும், உணர்வுகளையும் கட்டப்படுத்தி சாந்தமான நிலையில் முஸ்லிம்கள் நோற்ற  நோன்பின் பிரதி பலன்களையும், ஏனைய மாதங்களிலும் அவை எம்மை வந்தடைய தியாகத்துடன் செயற்பட வேண்டும்.

நாட்டில் அமைதி, சமாதானம், சகோதரரத்துவம் என்பனவற்றை உருவாக்கும் பணியில் முஸ்லிம்கள் முதன்மையானவர்கள் என்ற சொல்லை எல்லா சந்தர்ப்பங்களிலும் பிற சமூகத்தவர்கள் கூறும் அளவுக்கு எமது செயற்பாடுகள் அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், இலங்கை முஸ்லிம்களின் மீட்சிக்கும், சுபீட்சத்திற்குமாக இன்றைய நோன்பு பெருநாள் தினத்தில் இரு கரமேந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் என்றும் தமது பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்

Published by

Leave a comment