நலிவுற்ற சமூகமாக மாறும் இலங்கை முஸ்லிம்கள்!

chainஉலகத்தில் ஓர் பாகத்தில் ஷவ்வால் மாதம் தலைப்பிறை கண்டதையடுத்து உலகில் அனேகமான நாடுகளில் நோன்புப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிறைவிடயத்தில் ஏற்பட்ட பிணக்கால் நோன்பு பிடிக்க ஹராமான நாளான பெருநாள் தினத்தில் இலங்கை முஸ்லிம்கள் நோன்பிருப்பதை நியாயப்படுத்த யாருமில்லை!

அ’ல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்’ என்ற திருமறை வசனத்தை ‘ஒற்றுமை எனும் கயிற்றைப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று மாற்றி தவறாக விளங்கிக் கொள்வதால் சமூகத்தில் பிரதான தவறுகள் இடம்பெற்றாலும் ஒற்றுமைக்காக சமூகம் கணக்கெடுப்பதில்லை!

இத்தகைய தலைவர்கள் சீதனத்தை ஆமோதித்தாலும், வட்டியை அங்கீகரித்தாலும், வட்டி நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டாலும் மக்கள் கணக்கெடுப்பதில்லை!

கிண்ணியா மற்றும் புத்தளம் பிரதேசங்களில் நேற்று மாலை ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாயலில் குழுமியிருந்த  பிறைக் குழவினருக்கு பிறையைக் கண்டவர்கள்  அறிவித்தும், வானிலை அவதானத்தை  ஆதாரம் காட்டி, தட்டிக்களித்ததாக கிண்ணியா மற்றும் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு சிறு விடயமாக இவர்கள் கருதும் விடயங்கள்தான் பின் நாட்களில் பாரிய பிரிவுகளாகவும், குழுக்களாகவும் சமூகத்தில் தோற்றம் பெறுவதற்கு அடிப்படைகளாக அமைந்து வருகின்றன.

தாங்கள் எது சொன்னாலும் மக்கள் கேட்பார்கள் என்ற நினைப்பில் முஸ்லிம் தலைமைத்துவம் இருப்பதால் தான் இன்று முஸ்லிம்கள் இந்நாட்டில்  கேவலப்படுத்தப்படும் அளவுக்கு உள்ளாகி இருக்கின்றனர் எனபதை மனவேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வண்ணம்,

அப்துல் ஸத்தார்
கிழக்குமண்ணிலிருந்து..

Published by

Leave a comment