தூங்கும் முஸ்லிம் அமைச்சர்களும் கிழக்கில் உதயமாகும் புதிய மாவட்டமும்

sri-eastern[1]திருகோணமலை: கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் புதிதாக சிங்கள மாவட்டம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சேருவில மாவட்டம் என்ற பெயரிலான இந்த மாவட்டம் திருகோணமலை மாவட்டத்துக்கு மேலதிகமாக அமைக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த மாவட்டத்துக்காக அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டு 500 ஏக்கர் வரையான காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது.

இறக்கண்டி முதல் குச்சவெளி வரையிலான கடலோர காணிகள் இதில் உள்ளடங்குகின்றன.

இந்த நிலையில் தற்போது மூதூரில் இருந்து கிண்ணியா வரையான மேலும் 300 ஏக்கர் காணிப்பரப்பு இந்த புதிய மாவட்டத்துக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருக்கின்ற போதும் இவ்வாறான காணி சுவீகரிப்புகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காவி உடைக்கு மதிப்பளிக்காத பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை

காவி உடைக்கு மதிப்பளிக்காத பௌத்த பிக்குகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பௌத்த மத தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான புதிய சட்டம் ஒன்று இயற்றப்படவுள்ளது.

பிரதமர் டி.எம்.ஜெயரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட மூலம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இதனை தாம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பௌத்த துறவிகள் பலர் பௌத்த மதத்தின் விழுமியங்களை மீறி செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன.இதனை தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். jpc

Published by

Leave a comment